நான் 10–ம் வகுப்பு தேர்வு எழுதும்போது, எனக்கு பிறப்பு சான்றிதழ்இல்லாததால், பள்ளி மாற்றுச்சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையேகுறிப்பிட்டுவிட்டேன். அதன்பின்னர் பிளஸ்–2 தேர்விலும் அதேபோலகுறிப்பிட்டிருந்தேன்.இதன்பின்னர் கடந்த 2010–ம் ஆண்டு வானூர் குற்றவியல்கோர்ட்டில்வழக்கு தொடர்ந்தேன். 10 மற்றும் பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ்கள்,பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றில் 1992–ம் ஆண்டுஜனவரி 16–ந்தேதி நான் பிறந்ததாக பதிவு செய்யவேண்டும் என்ற உத்தரவை பெற்றேன.
சான்றிதழ்கள்
குற்றவியல் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வருவாய்துறை அதிகாரியிடம், பிறப்பு சான்றிதழ் பெற்றேன். அதன்பின்னர், நான்படித்த பள்ளி நிர்வாகத்திடம் இருந்து, 1992–ம் ஆண்டு பிறந்தேன் என்றுபுதிய மாற்றுச்சான்றிதழை பெற்றேன். இந்த ஆவணங்களை எல்லாம்வைத்து, என்னுடைய 10 மற்றும் பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ்களில்பிறந்த தேதியை மாற்றித்தரும்படி தமிழக தேர்வுத்துறை செயலாளரிடம்கடந்த 2014–ம் ஆண்டு மனு செய்தேன். பலமுறை நேரில் சென்றுமுறையிட்டும், பிறந்த தேதியை திருத்தம் செய்து தராமல் உள்ளார்.எனவே, என்னுடைய உண்மையான பிறந்த தேதியை குறிப்பிட்டுபுதிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும்படி தேர்வுத்துறைசெயலாளருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
எஸ்.எஸ்.எல்.சி. விதிகள்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில்கூறியிருப்பதாவது:–எஸ்.எஸ்.எல்.சி. விதிகள், பிரிவு 5–ன்படி, வயது மற்றும்பெயர்களில் ஏதாவதுதிருத்தம் இருந்தால், அந்த திருத்தத்தை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுஎழுதுவதற்கு முன்பே செய்துவிட வேண்டும். தேர்வுக்கு பின்னர்,திருத்தங்களை செய்ய முடியாது என்று தெளிவாக கூறுகிறது.
இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.








