பத்தாம் வகுப்பு கணித தேர்வினை பற்றிய ஒரு சிறியதொகுப்பு:
மீத்திறன் குறைந்த மாணவர்களுக்கு 60 மதிப்பெண்கள் பெறுவது எளிது 100 மதிப்பெண்கள் பெறுவது சற்று கடினம்.சென்ற ஆண்டினை காட்டிலும் இந்த ஆண்டு சென்டம் குறைய வாய்ப்பு !!
நேற்று தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு கணித தேர்வினை மாணவர்கள் எழுதினார்.அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தனர்.எப்பொழுதும் பத்தாம் வகுப்பு கணித வினாத்தாள் மட்டும் மாணவர்களுக்கு வித்தியாசமாக அமைக்கப்பட்டுவருகிறது. அதன்படி இந்த ஆண்டு மிகவும் வித்தியாசமான முறையில் வினாக்கள் அமைக்கப்பட்டு இருந்தன.அதன் அடிப்படையில் சில கருத்துக்கள்.
ஒரு மதிப்பெண் கேள்விகள் 15, அனைத்தும் புத்தகத்தில் உள்ள வினாக்கள் இதில் கேள்வி எண் -15 ACE என்பதின் தமிழாக்கம் பகடை என தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.இதில் தமிழ் வழி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் .
இரண்டு மதிப்பெண் வினாக்களை பொறுத்தவரை அனைத்து வினாக்களும் பாட திட்டவரைவின் படி எடுக்கப்பட்டுள்ளது.இரண்டு மதிப்பெண் தயாரிக்கப்பட்ட வினாக்கள் ( Creative Question) இதில் ஒன்று எப்பொழுதும் இல்லாதவாறு வர்க்கமூலத்தில் கேட்கப்பட்டுள்ளது.இது மீத்திறன் குறைந்த மாணவர்களுக்கு பின்னடைவு.இயற்கணிதத்தில் மூன்று 5 மதிப்பெண் வினாக்கள் வைக்கப்படும் இந்த ஆண்டு அந்த மூன்று வினாக்களும் மீத்திறன் குறைந்த மாணவர்கள் எழுத முடியா நிலை ஏற்பட்டுள்ளது. கட்டாய விடை அளிக்கும் வினாவை பொறுத்தவரை 2 மதிப்பெண் வினாவில் எப்பொழுதும் கேட்பது போன்று அளவியில்,முக்கோணவியல் பகுதியில் இடம் பெற்றுள்ளது.5 மதிப்பெண் வினாவை பொறுத்தவரை எளிமையான கேள்விகள் ஆனால் எதிர் பார்க்கப்படாதவை.
முக்கிய வினாக்கள் என கணிதத்தில் எதுவும் இல்லை பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் முழுமையாக தெரிந்த மாணவர்களால் மட்டுமே 100 மதிப்பெண்கள் பெற முடியும் என்ற நிலை பாராட்ட தக்கது.ஒட்டுமொத்தமாக கூற வேண்டுமானால் கேவித்தாள் தேர்ச்சியை பாதிக்காத கணித அறிவினை சோதிக்கும் வகையில் அனைத்து கேள்விகளும் இடம் பெற்றுள்ளது.இதன் மூலம் கண்டிப்பாக மாணவர்களுக்கு கணித அறிவு மேலோங்கும் என்பதில் ஐயம் இல்லை ..இது போன்ற கேள்விகளை எடுப்பதற்கு காரணமாக இருந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் கேள்வித்தாள் குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...
பி.விஸ்வநாதன் பட்டதாரி ஆசிரியர் கணிதம்
கல்விக்குரல் கணிதம் சென்டம் TEAM
அரசு உயர்நிலைப் பள்ளி. தெங்கியாநாதம்
விழுப்புரம் மாவட்டம்.