இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் சேர்ந்த கழிவுகள்
வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும். இப்போது இந்த முத்திரையை எப்படி
செய்வது என்று பார்க்கலாம். காலை, மாலை இருவேளையும் 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். முத்திரை செய்த பிறகு, கட்டாயம் நீர் அருந்த வேண்டும்.
முத்திரை செய்யும் காலங்களில் நீர் அதிகமாகக் குடிப்பதால், கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. வாய் துர்நாற்றம், வயிற்றுப்போக்கு போன்றவை வராமலும் தடுக்கிறது.
புதிதாகச் செய்பவர்களுக்கு, சில நாட்களுக்கு மட்டும் பசி எடுக்காது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. வயிறுமுட்ட, சாப்பிடக் கூடாது.
முதன் முதலாகச் செய்பவர்கள், மூன்று வாரங்கள் வரை செய்யுங்கள். பிறகு, மாதத்துக்கு மூன்று நாள் செய்தாலே போதும்.
மருந்துகளை உட்கொள்வோர், இந்த முத்திரையைச் செய்தால், அதிகமாக நீர் அருந்த வேண்டியது மிக அவசியம்.
சிலருக்கு இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்கு, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர், வெந்நீர் குடித்தாலே போதும்.
பலன்கள் :
காபி, டீ, இனிப்பு உணவுகளுக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்தால், அந்தப் பழக்கத்திலிருந்து எளிதில் வெளிவரலாம்.
உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும். முடி வளர்ச்சி சீராக இருக்கும். சருமத்தில் பொலிவுகூடும். சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை தீரும். உடலும் மனமும் ஆரோக்கியமாகும்.








