குழந்தைகள் தினமும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதால், அவர்களுடைய திறன்கள் அதிகரிக்கின்றன. ஊக்கப்படுத்துதல், நம்பிக்கை, தன் முன்னேற்றம், பெற்றோர்களுடனான உறவு ஆகிய வாழ்வியல் திறன்களும் அதிகரிக்கின்றன.
தொடர்ந்து மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சியானது, இயற்கையாகவே உடலின் இயக்கத்தை சீராக்குகிறது. இதயநோய்கள் வருவது இயல்பாகவே தடுக்கப்படுகிறது. உடற்பயிற்சி இதயத்துக்குச் செல்லும் தசைகள் மற்றும் நரம்புகளின் இயக்கத்தைச் சீர்படுத்துகிறது.
பள்ளிக்குச் செல்வதற்கு முன்பும் பின்பும் குழந்தைகள் மேற்கொள்கிற, உடற்பயிற்சியானது, குழந்தைகளின் கல்வியையும் மேம்படுத்துகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. உடல் உழைப்பு சார்ந்த பயிற்சிகள் சிறுவயதில் மட்டும் அல்லாமல், பொது வெளிகளிலும் வேகமாக இயங்கச் செய்கிற வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகிறது.









