தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியை தரும் பாடம்:

கடுமையான சோதனைகளை சந்திக்க நேர்ந்தாலும் தன்னம்பிக்கையையும்,
விடாமுயற்சியையும் கை விடவே கூடாது. எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும்
சந்திக்காமல் ஒருபோதும் முன்னேற்றம் காண முடியாது.
சரியான திட்டமிடுதல், கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகிய மூன்றும் இருந்தால்
வாழ்க்கை இலக்கை எளிதாக எட்டிவிடலாம். ‘தன்னால் முடியுமா?’ என்ற
சந்தேகத்துடன் எந்த செயலையும் தொடங்கக்கூடாது. தன்னம்பிக்கையுடன் ஆரம்பிக்க
வேண்டும். உழைப்பதற்கு தயங்கிக்கொண்டே இருந்தால் தோல்விதான் மிஞ்சும்.
மனக்குழப்பம் கொண்டிருந்தால் அது செயல்திறனை பாதிக்கும்.
தோல்விகள் தரும் அனுபவ பாடம்தான் வெற்றியின் சூட்சுமத்தை
கற்றுக்கொடுக்கும். வாழ்க்கையை உயர்த்தும் உன்னதமான காரியங்களில் ஈடுபட
முயற்சிக்கும்போது ‘நம்மால் அதை செய்து முடிக்க முடியும்’ என்ற
நம்பிக்கையோடு களம் இறங்க வேண்டும். நல்ல காரியம் என்று நினைத்து ஒன்றை
செய்துமுடிக்க இறங்கிவிட்டால், நிச்சயம் அதில் இடையூறுகள் வரத்தான்
செய்யும். எத்தனை இடையூறுகள் வந்தாலும் அந்த காரியத்தில் இருந்து
பின்வாங்கிவிடக்கூடாது.கடுமையான சோதனைகளை சந்திக்க நேர்ந்தாலும் தன்னம்பிக்கையையும்,
விடாமுயற்சியையும் கை விடவே கூடாது. ‘எடுத்த காரியத்தை முடிக்காமல்
விடமாட்டேன்’ என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் எதிர்வரும் குறுக்கீடுகளையும், தடைகளையும் அகற்றவே முடியாது.
குறிக்கோளில் இருந்து பின்வாங்காமல், மனம் தளராமல் செயல்பட்டால்
முட்டுக்கட்டைகள் அகன்றுவிடும். எவ்வளவு காலதாமதமானாலும், எதை இழந்தாலும்
வெற்றி நிச்சயம் மகுடம் சூட்டும்.
எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்காமல் ஒருபோதும் முன்னேற்றம் காண
முடியாது. சாதனை படைத்தவர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் சோதனைகளும்,
ஏமாற்றங்களுமே மிஞ்சியிருக்கும். தோல்வி அடையும் ஒவ்வொரு சமயத்திலும்
வெற்றிப்படிக்கட்டுகளை நோக்கித்தான் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறோம்
என்று எண்ணி விடா முயற்சியுடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் வசப்படும்.