எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நேற்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடி வடைந்தது.
இதைத் தொடர்ந்து, விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1-ம் தேதி
தொடங்குகிறது.10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கியது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர்.
தமிழ்,
ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் முடி வடைந்த
நிலையில், கடைசி தேர் வான சமூக அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. தேர்வு
எளிதாக இருந்த தாக பெரும்பாலான மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். நேற் றுடன்
பொதுத்தேர்வு முடிவடைந்து விட்டதால், தேர்வுக் கூடத்தை விட்டு வெளியே வந்த
மாணவ-மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.இந்த காட்சியை சென்னை
நகரில் பல பள்ளிகளில் பார்க்க முடிந்தது. ஒருசில மாணவர்கள் உற்சாக
மிகுதியில் பாடப் புத்தகத்தை மேலே தூக்கி வீசியும் அது கீழே விழும்போது
ஓடிச்சென்று பிடித்தும் மகிழ்ந்தனர். சக மாணவர்களை கட்டிப்பிடித்தும்
மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
தேர்வு முடிந்துவிட்ட நிலையில்,
அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்று மாணவர்களிடம் கேட்டபோது,
கோடைவிடுமுறையை உற்சாக மாக கழிக்கப்போகிறோம் என்று மகிழ்ச்சி பொங்க
தெரிவித்தனர். இன்னும் சிலர் விடுமுறையில் தட்டச்சு, கணினி போன்ற ஏதேனும்
ஒரு பயிற்சியில் சேர விரும்புவதாக கூறினர்.10-ம் வகுப்பு மொழி சிறுபான்மை
மாணவர்களுக்கான விருப்ப மொழித்தாள் தேர்வு நாளை (வியா ழக்கிழமை)
நடைபெறுகிறது. இது கட்டாய தேர்வு கிடையாது. விருப் பப்பட்ட மாணவர்கள்
மட்டும் தேர்வெழுதலாம். எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1-ம்
தேதி தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் 78 மையங்களில் இப்பணி நடைபெற
உள்ளது.10-ம் வகுப்பு மொழி சிறுபான்மை மாணவர்களுக்கான விருப்ப மொழித்தாள்
தேர்வு நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இது கட்டாய தேர்வு கிடையாது.
விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் தேர்வெழுதலாம்.