பரு ஒரு பொதுவான பிரச்சனைதான். வளரும் பருவத்தில் ஒவ்வொருவருக்கும் வரும் பிரச்சனைதான் இது. இது தழும்புகளை குறிப்பாக அதிகம் தொடவோ தேய்க்கவோ அல்லது கிள்ளவோ செய்யும்போது ஏற்படுத்தும். அதன் மீது கற்றாழை சாற்றை தடவினால் அவற்றின் கடுமை குறைந்து அதனை குணப்படுத்தும்.
கண்களில் ஓரத்தில் வரும் சுருக்கங்கள் முதுமை துவங்குவதால் காரணமாக ஏற்படுவது. இது மிகவும் சென்ஸிடிவான பகுதி என்பதால் அதிக ஈரப்பதம் தேவைப்படுகிறது. எனவே ஒரு நல்ல கண் க்ரீமை தேர்ந்தெடுத்து பயன்படுத்திவந்தால் இந்த பிரச்சனையைக் குறைக்கலாம்.
கடுமையான உழைப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக கண்களுக்கு கீழ் ஏற்படும் பாதிப்பு இது. வெள்ளரிச் சாறு போன்ற இயற்கை வைத்தியங்கள் இந்த பிரச்சனையை ஒரு வார காலத்திற்குள் போக்கும் என்பதால் இது பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
மிக அதிக அல்லது மிகக் குறைந்த ஈரப்பதத்தினால் வறண்ட பொலிவில்லா முடி பிரச்சனை ஏற்படலாம். இதனை தவிர்க்க தொடர்ந்து முடியை பராமரித்து வலுவூட்டுங்கள்.









