தலைமுடிக்கு ஆயில் மசாஜ் செய்வது நல்லதா?
அன்றாடம் நாம் கூந்தலில் அதிக எண்ணெய்
தடவினால் அது நமது மண்டை ஓட்டினுள் சென்று முடியின் வளர்ச்சியை தூண்டுவதாக
சிலர் கூறுகின்றார்கள். ஆனால் அது மிகவும் தவறான கருத்தாகும்.
உண்மையில் நமது கூந்தல் வளர்ச்சிக்கும், நாம் தினமும் தடவும் எண்ணெய்க்கும்
எந்த வகை தொடர்பும் இல்லை என்று கூறுவதை விட எண்ணெய் எந்த விதத்திலும்
நமது கூந்தல் ஆரோக்கியத்துக்கு பயன்படுவது இல்லை என்பதே உண்மை ஆகும்.
நாம் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது, அது நமதுப் மண்டைப் பகுதியில்
ஒருவித வழுவழுப்புத் தன்மையை மட்டும் ஏற்படுத்துமே தவிர, கூந்தலின்
வளர்ச்சியை தூண்டாது.
மேலும் நாம் ஆயிலைக் கொண்டு தலையில் தேய்த்து மசாஜ் செய்தால் கூட அது
சிறிது நேரத்திற்கு கூந்தலை மென்மையாக வைப்பதுடன், ஒருவித ரிலாக்ஸான உணர்வை
மட்டும் தான் ஏற்படுத்தும்.
ஆயில் மசாஜ் செய்து விட்டு குளிப்பதால், நமது மண்டைப் பகுதியில் இருக்கும்
இயற்கையான எண்ணெய் பசை போய்விடுவதால், நமது கூந்தல் இன்னும் அதிகமாக வறண்டு
போகும் தன்மை ஏற்படுகிறது.
எனவே நாம் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் ஷாம்பு
போன்றவற்றின் மூலம் எவ்வித பயனும் இல்லை. நமது மண்டைப் பகுதியினுள்
இருக்கும் ஊட்டத்தைப் பொறுத்து அமைகிறது.