இரவு 9 மணிக்கு மேல் வீட்டில் வைஃப்பை பயன்படுத்துவதை பெரியோர்கள் தவிர்த்துவிட்டு குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் பேசுவதை வழக்கமாக கொள்வது நல்லது. தாங்கள் இணையத்தில் பார்த்த, படித்த விஷயங்களை அவ்வப்போது பரிமாறிக்கொள்வதும் சிறப்பு.
குழந்தைகள் கவனத்திற்கு...
* இமெயில், பேஸ்புக், ட்விட்டர் என்று உங்கள் இணையதளத்தின் அனைத்து கணக்குகளுக்கும் வைக்கும் பாஸ்வேர்டை யாருக்கும் பகிராதீர்கள்.
* பாஸ்வேர்டில் எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகள் (@) போன்றவற்றை சேர்ப்பது நலம். பாஸ்வேர்டுகள் திருடப்படாமல் பாதுகாக்க இது உதவும்.
* தனக்கும் தன் குடும்பத்தினர் மட்டும் அறியக்கூடிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
* இணையத்தில் அவ்வப்போது உங்களது சொந்த தகவல்களை கேட்கும் தளங்களுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது.
* உங்கள் சமூக வலைத்தளங்களில் allow, ok போன்று பட்டன்களை கிளிக் செய்வதற்கு முன்னால் எதற்காக உங்களிடம் அனுமதி கோருகிறார்கள் என்பதை அறிந்த பிறகே கிளிக் செய்யுங்கள்.
* உங்கள் பெற்றோர்கள் அல்லது உடன்பிறந்தவர்களின் பெயர்களை பாஸ்வேர்டாக வைக்காதீர்கள். எளிதில் உங்களது பாஸ்வேர்டை எதிரிகள் கண்டுபிடித்து விடுவார்கள்.
* புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் போது கூடுதல் கவனம் தேவை.
* தாங்கள் செல்லும் இடங்களை உடனுக்குடன் பதிவிடுவதும் ஆபத்துதான். சொந்தக் கருத்துகளை பதிவிடும் போது அதிக கவனம் தேவை. உங்களுக்கு வந்த தகவலையும் அப்படியே பகிராமல் அதன் உண்மைத் தன்மை உணர்ந்து ஆராய்ந்து பிறகு பகிருங்கள்.
* இந்தியாவில் இணையம் பயன்படுத்தும் 35 கோடி பேரில் 94% பேர் மொபைல் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துகிறார்கள்.
* இதில் 2.8 கோடி பள்ளி செல்லும் குழந்தைகள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்கிறது இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் சங்கம்.
* கிராமப்புறங்களில் பெண்கள் 10% இன்டர்நெட் சேவையை பயன்படுத்து கிறார்கள். நகர்புற பெண்களில் மூன்றில் ஒரு பெண் இணைய சேவையை பயன் படுத்துகிறார்கள்.
பிப்ரவரி 7ம் தேதி உலகளவில் சர்வதேச இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இணைய பயன்பாட்டின்போது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த safetyinternetday2017# என்ற பெயரில் கனடா, அமெரிக்கா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இணையதளத்தில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 73% பேர் குழந்தைகள் இணையத்தை பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு தேவை என வாக்களித்துள்ளனர்.
74% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு இணைய பயன்பாடு அவசியம் என்று வாக்களித்துள்ளார்கள். 21% பெற்றோர்கள் இணைய மோசடிக்காரர்களால் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்கள். பாலியல் தொல்லைகள் பெண் குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகம் இருப்பதாக 20% பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 19% ஆபாச காட்சிகள் அடங்கிய போர்னோ தளங்கள் குழந்தைகள் கவனத்தை சிதறடிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். அதனால் போர்னோ தளங்களை முடக்க அரசு தரப்பிலே முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோளும் வைத்துள்ளனர்.









