Flash News: #10th Result -2017 :விருதுநகர் மாவட்டம் முதலிடம்
10-ம் வகுப்பு பொதுத் தேர்விலும் விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில்
முதலிடம் பிடித்துள்ளது.எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு
முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. பிளஸ் 2 தேர்வுபோல,
இதற்கும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4% ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.8% அதிகம்.விருதுநகர் மாவட்ட தேர்ச்சி விகிதம் 98.55%.
தேர்ச்சி விகிதம்:இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4%. மாணவர்கள் தேர்சசி விகிதம் 92.5%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.2%.
இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.