1994 முதல் சிக்கிம் மாநில முதல்வராக பதவி வகிக்கும் பவன் குமார் சாம்லிங், முதலாவது பைரோன் சிங் செகாவத் வாழ்நாள் சாதனையாளர் விருது (1st Bhairon Singh Shekhawat Lifetime Achievement Honour in Public Service) பெற்றுள்ளார்.சிக்கிம் மாநிலத்தை இந்தியாவின் முதல் இயற்கை வேளாண்மை மாநிலமாக மாற்றியவர் இவர் ஆவார்.
Metaphysics, Morals and Politics என்ற புத்தகத்தை பேராசிரியர் அமல் குமார் எழுதியுள்ளார்.
வடக்கு தில்லி மாநகராட்சி மேயராக ப்ரீத்தி அகர்வால், துணை மேயராக விஜய் குமார் பகத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் முதன் முறையாக மலையாள சினிமாவில் நடிகைகள் உட்பட பெண் கலைஞர்களுக்காக புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.”உமன்ஸ் கலெக்டிவ் இன் சினிமா” என்ற பெயரில் புதிய சங்கத்தை தொடங்கியுள்ளனர்.
புனேவிலுள்ள கேலக்ஸி கேர் மருத்துவமனையில் சோலப்பூரைச் சேர்ந்த 26 வயதான பெண்ணுக்கு இந்தியாவின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது .மிகச் சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சையை 12 மருந்துவர்கள் கொண்ட குழு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.முதன்முதலாக 2014-ம் ஆண்டு ஸ்வீடனை சேர்ந்த பெண் ஒருவருக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மகராஷ்டா மாநிலத்தை சேர்ந்த விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் குல்கர்னி என்பவர் கலிபோர்னியா தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் உட்பட மூன்று பேருக்கு இஸ்ரேல் நாட்டின் “டேன் டேவிட் விருது” அறிவிக்கப்பட்டிருக்கிறது.வானியல் ஆராய்ச்சித் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.








