செல்போன் குறுந்தகவல் மூலம் +2 தேர்வு முடிவுகள் : செங்கோட்டையன் பேட்டி:
சென்னை:
கடந்த
மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை
மறுநாள் மே 12-ம் தேதி காலை 10 மணியளவில் வெளியாகவுள்ளது.
தேர்வு
முடிவுகளை www.tnresults.in, www.tnresults.nic.in, www.tnresults.gov.in
ஆகிய இணையதள முகவரிகளில் காண பள்ளி கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில்,
பிளஸ் 2 மாணவர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் மூலம் தேர்வு முடிவுகள்
தெரிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
மேலும், “நீட் தேர்வுக்கு
மாணவர்களை தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் சிறப்பு
வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும்
அவர் கூறினார்.








