TNPSC இணையதளத்தில் ஜாதிகள் பட்டியலில் மாற்றம் !!!

போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்
பதிவில், ஜாதிகளின் பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு பணி யாளர்
தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித்
தேர்வு களில் பங்கேற்க, அதன் இணையதளத்தில், ஒருமுறை பதிவு முறையில்,
ஆன்லைனில் தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.
இதில், தேர்வரின் அனைத்து விபரங்களையும்
பதிவுசெய்ய வேண்டும். இதில், முந்தைய, ‘குரூப் – 2’ தேர்வு அறிவித்த போது,
ஒருமுறை பதிவுபட்டியலில் இருந்த,நத்தமன், மலையமன் ஆகிய ஜாதிகளின் பெயர்,
தற்போதைய தேர்வின் போது இல்லை என, தேர்வர்கள் தெரிவித் தனர். இது குறித்து,
நமதுநாளிதழில் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. செயலர்,
விஜயக்குமார் அனுப்பிய விளக்கத்தில், ‘தேர்வர்கள் குறிப்பிடும் நத்தமன்,
மலையமன்ஆகிய இரு ,ஜாதிகளும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், பார்கவகுலம்
பட்டியலில் இணைக்கப் பட்டு உள்ளது. ‘எனவே, தேர்வர்கள் பார்கவ குலத்தில்
தங்கள் ஜாதிகளைப் பார்த்து விண்ணப்பிக்க லாம்’ என தெரிவித்துள்ளார்.