
வி டி மூர்த்தி என்பவர் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பின் தொலைபேசி சேவைகளை கட்டுப்படுத்தும்படி நீதிமன்றத்தை பொது நல வழக்கு
ஒன்றின் மூலம் அணுகினார்.
இதையடுத்து அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் அரசை
பதிலளிக்கும்படி நீதிபதிகள்
உத்தரவிட்டனர். வி டி மூர்த்தி என்பவர்
ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பின் தொலைபேசி சேவைகளை கட்டுப்படுத்தும்படி
நீதிமன்றத்தை பொது நல வழக்கு ஒன்றின் மூலம் அணுகினார். இதையடுத்து அக்டோபர்
17 ஆம் தேதிக்குள் அரசை பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தற்காலிக நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி சி ஹரி சங்கர் ஆகியோர்
அடங்கிய அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது இந்தத் தொலைபேசி சேவைகளை
தீவிரவாதிகள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்தி செய்யப்படும் அழைப்புகளின் சங்கேதக் குறியீடுகளை
கண்டறிவது சுலபமல்ல என்றும் மனுவானது குறிப்பிட்டுள்ளது.
இந்த சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி இதே போன்று தொலைபேசி சேவைகளை அளிக்கும்
இதர ஆப்ஸ்களையும் அரசின் ஒழுங்குமுறை சட்டகத்திற்குள் கொண்டு வர
அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தை மனுதாரர்
வலியுறுத்தினார். ”இவ்வாறு கட்டுப்படுத்த இயலாத இயக்கம்
தேசப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மட்டுமின்றி அரசின் கருவூலத்திற்கும்
நஷ்டம்” என்றும் மனுதாரர் கேட்டுக்கொண்டார்