'பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என கல்வி அமைச்சர், கலெக்டருக்கு கிராமத்தினர் மனு கொடுத்தனர். ஆனால் பள்ளியை ஏற்க அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து கிராமமக்களே தங்களது சொந்த செலவில் பள்ளியை நடத்தி வருகின்றனர். அவர்கள் இரண்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகின்றனர். மேலும் பள்ளிக்கு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். சமீபத்தில் கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்துள்ளனர்.
அரசு விதிமுறைப்படி 25 மாணவர்கள் இருந்தாலே தொடக்கப் பள்ளி துவங்கலாம். விதிமுறை இருந்தும் பள்ளியை ஏற்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
2012-13 முதல் 5 ஆண்டுகளாக பள்ளியை நடத்தி வருகிறோம். எங்கள் கிராமத்தில் 55 குழந்தைகள் உள்ளனர். பள்ளி தொடர்ந்து நடக்குமா என்ற பயத்தில் சிலர் பாப்பாகுடி, மேட்டுப்பட்டி பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர். வசதியில்லாதோரின் குழந்தைகள் தொடர்ந்து இங்கு பயின்று வருகின்றனர். தற்போது 25 குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் கிடைக்கவில்லை.
நாங்கள் தொடர்ந்து மனு கொடுத்ததின் விளைவாக 65 சென்ட் இடம், பள்ளி கட்டடம், தளவாட சாமான்களை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுக்க சொன்னார். 2015 ல் பதிவு செய்து கொடுத்தும் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர், என்றனர்.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பரமதயாளன் கூறுகையில், ''நான் அக்டோபரில் இருந்து தான் பொறுப்பு அலுவலராக உள்ளேன். அலங்கம்பட்டியில் பள்ளி துவங்குவது குறித்து
விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.








