இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் ஏற்பட்ட, 482 காலியிடங்களுக்கும் சேர்த்து, இந்த தேர்விலேயே பணி நியமனம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, பள்ளிக்கல்வி அமைச்சர், முதன்மை செயலர், டி.ஆர்.பி., தலைவர், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோரிடம், சிறப்பாசிரியர்கள், சுப்ரமணி, லட்சுமிபதி மற்றும் காந்தி ஆகியோர் மனு அளித்துஉள்ளனர்.
இதுகுறித்து மனு அளித்த ஆசிரியர்கள் கூறியதாவது:நடப்பு கல்வி ஆண்டில், சிறப்பு பாடப்பிரிவில், 482 காலி இடங்கள் ஏற்பட்டுஉள்ளன. அவற்றை, முக்கிய பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் இடங்களாக மாற்றப்பட உள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படி மாற்றினால், போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.எனவே, சமீபத்தில் நடந்த போட்டி தேர்வின் அடிப்படையில், கூடுதலாக, 482 இடங்களை சேர்த்து, பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.








