ரூ.1 கோடிக்கு மேலான டெபாசிட்களின் வட்டி விகிதத்தைஸ்டேட் பேங்க்
ஆஃப்இந்தியா உயர்த்தி அறிவித்துள்ளது.இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை
வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ),
இரண்டு வருட கால வரம்புக்கான ரூ.1 கோடி முதல் ரூ.10
கோடி வரையில்டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கான வட்டி தொகையை 3.75
சதவிகிதத்திலிருந்து 4.75 சதவிகிதமாகவும், 4.25 சதவிகிதத்திலிருந்து 5.75
சதவிகிதமாகவும் உயர்த்தியுள்ளது. அதேபோல மூத்த குடிமக்களுக்கான வட்டி
விகிதமானது 5.75 சதவிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு
நடைமுறைநவம்பர் 30 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.இத்திட்டத்தில் முதிர்வு
காலத்திற்கு முன்னர் பணத்தை திரும்பப் பெற்றால் விதிக்கப்படும் அபராதத்
தொகை ஒரு சதவிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மாதத் தொடக்கத்தில் மேற்கூறிய டெபாசிட்களுக்கான வட்டித்
தொகையை எஸ்பிஐ வங்கி 0.25 சதவிகிதம் குறைத்திருந்தது. இந்நிலையில் தற்போது
டெபாசிட் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.எஸ்பிஐ வங்கியின் இந்த வட்டி
உயர்வு நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டின் பிற வங்கிகளும் வட்டித் தொகையை
அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.