01.01.2018 திங்கட்கிழமை வரலாற்றில் இன்று : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


01.01.2018 திங்கட்கிழமை வரலாற்றில் இன்று :

ஜனவரி 1 கிரிகோரியன் ஆண்டின் முதல் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 (நெட்டாண்டுகளில் 365) நாட்கள் உள்ளன.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

                நிகழ்வுகள்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

கிமு 45 – யூலியன் நாட்காட்டி முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

630 – முகமது நபி தனது படைகளுடன் மெக்கா நோக்கிப் பயணமானார்.

1502 – போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனெய்ரோ நகரை அடைந்தான்.

1600 – ஸ்கொட்லாந்து ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.


1700 – ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.

1752 – கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.

1772 – 90 ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தக்கூடியதான உலகின் முதலாவது பயணிகள் காசோலை லண்டனில் விற்பனைக்கு வந்தது.

1800 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.

1801 – பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்துப் பேரரசு இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது.

1804 – எயிட்டி பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.

1806 – பிரெஞ்சு குடியரசு நாள்காட்டி பாவனையிலிருந்து விலக்கப்பட்டது.

1808 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.

1833 – ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகளின் மீது உரிமை கொண்டாடியது.

1858 – இலங்கையில் முதலாவது தந்திச் சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பமானது.

1861 – போர்ஃபீரியோ டயஸ் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினான்.

1866 – யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை (Police Force) அமைக்கப்பட்டது.

1867 – ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் “சின்சினாட்டி” நகருக்கும் கென்டக்கியின் “கொவிங்டன்” நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.

1872 – இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

1872 – முதலாவது இந்திய அஞ்சல் (தபால்) சேனீ மலைச் (Mount Cenis) சுரங்கம் ஊடாக சென்றது.

1877 – இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா டில்லியில் அறிவிக்கப்பட்டார்.

1883 – இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.

1886 – பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.

1890 – எரித்திரியா இத்தாலிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.

1893 – ஜப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

1896 – இலங்கையில் முன்னர் ரொபேர்ட்சன் கம்பனியின் பொறுப்பில் இருந்த தொலைபேசி சாதனத்தை இலங்கை அரசு கையேற்றது.

1899 – கியூபாவில் ஸ்பானிய ஆளுகை முடிவுற்றது.

1901 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாஸ்மானியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆஸ்திரேலிய பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார்.

1905 – டிரான்ஸ்-சைபீரியன் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1906 – பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1911 – வட மண்டலம் தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலிய நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.

1912 – சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.

1919 – ஸ்கொட்லாந்தில் அயோலயர் என்ற கப்பல் (HMS Iolaire) மூழ்கியதில் 205 பேர் கொல்லப்பட்டனர்.

1926 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.

1927 – மெக்சிக்கோவில் கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.

1927 – துருக்கி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. இதன்படி 1926, டிசம்பர் 18இற்கு அடுத்த நாள் ஜனவரி 1, 1927ஆக மாற்றப்பட்டது.

1928 – யோசப் ஸ்டாலினின் தனிச்செயலரான போரிஸ் பசனோவ் சோவியத் ஓன்றியத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எல்லை கடந்து ஈரான் சென்றார்.

1935 – இத்தாலியக் குடியேற்ற நாடுகளான திரிப்பொலி, சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து லிபியா ஆகியன.

1945 – பெல்ஜியத்தின் செனோன் நகரில் 30 ஜேர்மனிய போர்க்கைதிகள் ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1947 – இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஜேர்மனியின் பிரித்தானிய மற்றும் ஐக்கிய அமெரிக்கப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு எனப் பெயர் பெற்றது.

1948 – பிரித்தானிய தொடருந்து சேவைகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

1948 – பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 மில்லியன் ரூபாய் பணத்தை இந்தியா வழங்க முடியாதென அறிவித்தது.

1949 – ஐநா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.

1956 – சூடான் நாடு எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றிடம் இருந்து விடுதலை பெற்றது.

1958 – இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ஸ்ரீ எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.

1958 – ஐரோப்பிய சமுகம் அமைக்கப்பட்டது.

1959 – கியூபாவின் அதிபர் ஃபுல்ஜென்சியோ பட்டீஸ்டா ஃபிடெல் காஸ்ட்ரோவின் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1960 – கமரூன் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1962 – மேற்கு சமோவா நியூசிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1971 – ஐக்கிய அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் புகைத்தல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன.

1978 – ஏர் இந்தியா போயிங் 747 விமானம் வெடித்து பம்பாயில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 213 பேர் கொல்லப்பட்டனர்.

1981 – பலாவுக் குடியரசு ஐக்கிய அமெரிக்காவின் அதிகாரத்துள் சுயாட்சி பெற்றது.

1983 – அர்ப்பாநெட் தனது மூல பிணைய நெறிமுறைகளை இணைய நெறிமுறையாக (TCP/IP) மாற்றியது இன்றைய இணையத்தின் தொடக்கத்திற்குக் காரணமானது.

1984 – புரூணை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1993 – செக்கோசிலவாக்கியா நாடு செக் குடியரசு, சிலோவாக் குடியரசு என இரு நாடுகளாகப் பிளவடைந்தது.

1995 – உலக வணிக அமைப்பு உருவாக்கம்.

1999 – யூரோ நாணயம் அறிமுகம்.

2008 – கொழும்பில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் [[இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

                 பிறப்புகள்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1894 – சத்தியேந்திர நாத் போசு, இந்தியக் கணிதவியலர் (இ. 1974)

1902 – பஸ்டர் நூபன், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (இ. 1977)

1914 – நூர் இனாயத் கான், பிரித்தானிய உளவாளி (இ. 1944)

1919 – ஜே. டி. சாலிஞ்சர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2010)

1925 – வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (இ. 2015)

1942 – அலசான் வட்டாரா, ஐவோரிய அரசியல்வாதி

1943 – செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர்

1944 – உமர் அல்-பஷீர், சூடானிய அரசுத்தலைவர்

1951 – நானா படேகர், இந்திய நடிகர்

1952 – சேக் அமத் பின் கலீபா அல் தானி, கத்தார் மன்னர்

1952 – ஷாஜி என். கருண், இந்தியத் திரைப்பட இயக்குநர்

1966 – மில்லர், முதல் கரும்புலி (இ. 1987)

1975 – சோனாலி பண்டர், இந்திய நடிகை

1978 – பரமஹம்ஸ நித்யானந்தர், இந்திய ஆன்மிகவாதி

1978 – வித்யா பாலன், இந்திய நடிகை

1984 – அலோக் கபாலி, வங்காளதேச துடுப்பாளர்

1986 – சுங்மின், தென்கொரிய நடிகர்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

                இறப்புகள்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1894 – ஐன்ரிக் ஏர்ட்சு, செருமானிய இயற்பியலாளர் (பி. 1857)

1901 – சி. வை. தாமோதரம்பிள்ளை தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி (பி. 1832)

1955 – சாந்தி சுவரூப் பட்நாகர், இந்திய அறிவியலாளர் (பி. 1894)

1992 – கிரேசு ஹாப்பர், அமெரிக்க நிரலாளர் (பி. 1906)

2008 – தியாகராஜா மகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1960)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

             சிறப்பு நாள்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

புத்தாண்டு நாள் (கிரெகொரியின் நாட்காட்டி)
விடுதலை நாள்:
கியூபா (1899)
எயிட்டி (1804)
சூடான் (1956)
கமரூன் (1960)
புரூணை (1984)
செக் குடியரசு (1993)
சிலோவாக்கியா (1993)
தாய்வான் (1912)
உலக அமைதி நாள் (கத்தோலிக்க திருச்சபை)
உலகக் குடும்ப நாள் (பன்னாட்டு)
குவான்சா கடைசி நாள் (அமெரிக்க ஐக்கிய நாடு)

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H