1. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும் - நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்று சேர்ந்து நாங்க ரெடி உணவை நல்ல படியாக ஜீரணமாக்கி இரத்தத்தில் கலக்குவதற்குத் தயார் என்று உடல் நம்மிடம் பேசும் பாஷை தான் பசி.
2. உணவில் எச்சில் கலக்க வேண்டும் - எச்சில் நிறைய நொதிகள் ( என்சைம்) உள்ளன. எச்சில் கலக்காத உணவு கெட்டப் பொருளாக இரத்தத்தில் கலக்கிறது. அதனால் உதட்டை மூடி உணவை மெல்ல வேண்டும், வாயை திறந்து சாப்பிட்டால் உணவில் காற்று கலந்து எச்சில் சுரக்காமல் ஜீரணத்தை கெடுத்து, கெட்ட பொருளாக மாற்றிவிடும்.
3. சாப்பிடும் போது கவனம் உணவில் இருக்க வேண்டும்.
4. உணவைப் பற்களால் நன்றாக கூழ் போல அரைத்து உண்ண வேண்டும் - தொப்பை வராமல் இருக்க, வாயை மூடி நன்றாக கூழ் போல அரைத்தப்பின் உண்ண வேண்டும். சாப்பிடும் அரை மணி நேரம் முன் பின் தண்ணீர் குடிக்க கூடாது, சாப்பிடும் பொழுதும் குடிக்க கூடாது. ஜீரணத்திற்க்கு தண்ணீர் எதிரி. இப்படி 1.30 மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்தாலே தொப்பை வராது. ஜீரணம் எளிதாக நடக்கும்.
5. வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்க்கு தண்ணீர் எதிரி.
6. சாப்பிடும் பொழுது TV பார்க்க கூடாது, புத்தகம் படிக்க கூடாது, பேசக் கூடாது, செல்போன் உபயோகிக்க கூடாது.
7. குளித்தால் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்குப் குளிக்க கூடாது.
8. சாப்பிடும் உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும்
9. சுவைகளை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்
10. உணவு சாப்பிடும்போது முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்.
11. வீட்டில் அன்பாக சமைத்த உணவு நல்லது. ஹோட்டல் உணவு கெட்டது.
இது தான் நாம் அனைவரும் உணவை சாப்பிடும் முறை. நல்ல உணவை முறையாக சாப்பிட்டால் நம் ஆரோக்கியம் உறுதி. எல்ல உறுப்புக்களும் சிறப்பாக செயல் படும்.
எண்ணம் போல வாழ்க்கை, செழிக்கட்டும் விவசாயம், பொழியட்டும் மழை, அனைத்தையும் நேசிப்பொம், வாழ்க வளமுடன். 🙏🏾