புதுடெல்லி:
காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே கடந்த 125 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது.
கர்நாடகா மாநில அரசு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட மறுப்பதால் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சினைக்காக சென்னை-மைசூர் மாகாணங்களுக்கு இடையே 1892-ம் ஆண்டு முதன் முதலில் ஒப்பந்தம் போடப்பட்டது. 1924-ம் ஆண்டு மீண்டும் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காவிரி நதி நீர் பிரச்சினையைத் தீர்க்க “நடுவர் மன்றம்” உருவாக்கப்பட்டது.
தமிழ்நாடு, கர்நாடகா பாசனப் பகுதிகளில் ஆய்வு செய்த நிபுணர்கள் 1991-ம் ஆண்டு இடைக்கால தீர்ப்பு வழங்கினார்கள். 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வெளியிட்டது.
அதில் கர்நாடகா ஒவ்வொரு ஆண்டும் 10 மாத கால இடைவெளியில் தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் தமிழகம் இதை ஏற்கவில்லை. கூடுதலாக 72 டி.எம்.சி. தண்ணீர் வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ‘அப்பீல்’ செய்தது.
இதற்கிடையே கர்நாடகா மாநில அரசும் சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் காவிரி நீரின் அளவை 132 டி.எம்.சி.யாக குறைக்க வேண்டும் என்று கர்நாடகா சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்தியது.
இந்த நிலையில் புதுச்சேரி, கேரளா மாநிலங்களும் தங்களுக்கு கூடுதல் தண்ணீர் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்குகள் விசாரணை நடந்தது. 4 மாநிலங்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தன. அதோடு நீர்வள நிபுணர்களின் கருத்துக்களும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டன.
இதற்கிடையே காவிரி நதி நீர் பங்கீடு வழக்கை ஒரே மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவை வெளியிட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்வராய், கான்வில்கர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது.
அந்த பெஞ்ச் வாரத்துக்கு 3 நாட்கள் வீதம் காவிரி நதி நீர் பங்கீடு வழக்கை விசாரித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந்தேதி காவிரி நீர் பிரச்சினை வழக்கு விசாரணை முடிந்தது. ஆனால் தீர்ப்பு வெளியிடுவதை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் 150 நாட்களுக்கு பிறகு காவிரி வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதனால் 125 ஆண்டு கால பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு வருமா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழ்நாடு, கர்நாடகா மாநில விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டது.
சுப்ரீம்கோர்ட்டில் இன்று காலை 10.30 மணிக்கு காவிரி வழக்கு தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
காவிரி நதியை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. அது எந்த ஒரு மாநிலத்திற்கும் சொந்தமானது அல்ல.
காவிரி தண்ணீரை மாநிலங்கள் தங்களுக்குள் சுமூகமாக பிரித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் அளவு சுமார் 20 டி.எம்.சி. இருக்கிறது.
அந்த அடிப்படையில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. காவிரி தண்ணீர் ஒதுக்கப்படுகிறது. 10 மாத இடைவெளியில் இந்த தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும். தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு கணக்கிடப்படும்.
கர்நாடகத்துக்கு 184.75 டி.எம்.சி. தண்ணீர் ஒதுக்கப்படுகிறது. கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை (கேரளாவுக்கு 30 டி.எம்.சி.யும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி.).
காவிரி நீர் விஷயத்தில் குடிநீர் பயன்பாட்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதன்படி பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்காக கூடுதல் நீர் ஒதுக்கப்படுகிறது.
கர்நாடகத்துக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 14.75 டி.எம்.சி. நீரில் பெங்களூர் குடிநீருக்கு 4.75 டி.எம்.சி. பயன்படுத்திக் கொள்ளலாம்.
காவிரி பாசன படுகையில் இருந்து தமிழகம் கூடுதலாக 10 டி.எம்.சி. தண்ணீர் எடுத்து கொள்ளலாம். இதன் மூலம் தமிழகத்துக்கு மொத்தம் 20 டி.எம்.சி. நிலத்தடி நீர் கிடைக்கும்.
கர்நாடகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை கருத்தில் கொண்டும் அதிகரித்து வரும் பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் கர்நாடகத்துக்கு காவிரி நீரின் ஒதுக்கீடு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே காவிரி நடுவர் மன்றம் கர்நாடகத்துக்கு ஒதுக்கீடு செய்த 270 டி.எம்.சி. தண்ணீரின் அளவு 14.75 டி.எம்.சி. அதிகரித்து மொத்தம் 184.75 டி.எம்.சி.யாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு மொத்த ஒதுக்கீடாக நடுவர் மன்றம் 419 டி.எம்.சி. ஒதுக்கி இருந்தது. அது 404.25 டிஎம்.சி.யாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நீடிக்கும். (ஒரு டி.எம்.சி. என்பது ஒரு கோடி கன அடி நீராகும்).
காவிரி நதி நீரை பங்கீடு செய்வது கொள்வது தொடர்பாக மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் இத்துடன் முடித்து வைக்கப்படுகின்றன.
இறுதி தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அனுமதியில்லை. இதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற வெளியிட்ட இறுதி தீர்ப்பில் தமிழ் நாட்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தர விடப்பட்டு இருந்தது.
ஆனால் இன்று சுப்ரீம் கோர்ட்டு 177.25 டி.எம்.சி. தண்ணீரே வழங்க தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் 14.75 டி.எம்.சி. தண்ணீர் தமிழ் நாட்டுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு மிகவும் பாதிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் 264 டி.எம்.சி. தண்ணீர் வேண்டும் என்று கேட்டது. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் சுமார் 200 டி.எம்.சி. தண்ணீராவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தது.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக 177.25 டி.எம்.சி. தண்ணீரே ஒதுக்கீடு செய்துள்ளது.
சுப்ரீம்கோர்ட்டின் இந்த தீர்ப்பு காவிரி டெல்டா பகுதி பாசன விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக அரசும் இந்த தீர்ப்பால் அதிருப்தி அடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இந்த ஒதுக்கீடு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர். #CauveryVerdict #Cauverwater #TN #SC #tamilnews