மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கடின உழைப்பு
பள்ளி , கல்லூரி மாணவர்கள் தாங்கள் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என, மாணவர்களுக்கு ஆலோசனை கூறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம். இதனை மாத்திரை போல் உட்கொள்ள முடியாது.
தன்னம்பிக்கை என்பது நமக்கு நாமே சவால் நிர்ணயம் செய்யும் போதும், கடினமாக உழைக்கும் போது தான் வரும். தேர்விற்கு ஒருவர் நன்றாக தயார் செய்ய முடியும். ஆனால், தன்னம்பிக்கை இல்லாவிட்டால் தேர்வில் வெற்றி பெற முடியாது. கடவுளின் ஆசியிருந்தாலும், உங்களை நீங்கள் நம்பாவிட்டால், அது பலிக்காது என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.
மதிப்பெண்
நம்மை மேம்படுத்திக் கொள்ள சிந்திக்க வேண்டும். நீங்கள் பிரதமரோடு பேசவில்லை. உங்கள் நண்பருடன் பேசி கொண்டிருக்கிறீர்கள். நானும் இங்கு ஒரு மாணவனாக தான் வந்துள்ளேன். நீங்கள் எவ்வளவு மதிப்பெண் தருகிறீர்கள் என்பதை பார்க்க வேண்டும். நீங்கள் உங்களுக்குள் இருக்கும் மாணவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். கவனத்தை மேம்படுத்த யோகா பெரிதும் உதவும். இவ்வாறு அவர் பேசினார்.