இதே திட்டத்தில் 25 ஆயிரம் ரூபாய்க்கு ஆய்வக உபகரணம் வாங்குவதிலும் இதுபோல் சர்ச்சை எழுந்தது. இதற்கு பள்ளிகளில் குழு அமைத்து சுதந்திரமாக உபகரணம் கொள்முதல் செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. இதேபோல் நுாலகத்திற்கு தேவையான புத்தகங்கள் எவை, மாணவர் போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கு தேவையான புத்தகங்கள் என்ன என மாணவர், ஆசிரியரிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் வாங்க வேண்டும்.
'கமிஷன்' அடிக்க ஒரே கம்பெனியில் மொத்த புத்தகங்களையும் வாங்கும் சிலர் முயற்சிக்கு கல்வி அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஆசிரியர்கள் விரும்புகின்றனர்.








