மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியரும், தனித்தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியரும், சான்றொப்பம் அளித்தால் மட்டுமே, மதிப்பெண் பட்டியல் செல்லும். எனவே, மதிப்பெண் பட்டியலில் சான்றொப்பம் பெற வேண்டும்.
மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்படி: பிளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், ஜூன், 1, 2 மற்றும், 4ம் தேதிகளில், பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும். மொழி பாடம் ஒன்றுக்கு, தலா, 550 ரூபாயும், முக்கிய பாடங்களுக்கு, தலா, 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விடைத்தாள் மறுமதிப்பீடு தேவை என்றால், அவர்கள் முதலில் விடைத்தாள் நகலை பெற வேண்டும். அதை ஆய்வு செய்து, மறுமதிப்பீடு தேவை என்றால் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கேட்பவர்கள், மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. விடைத்தாள் நகல் பெற்று, மறுமதிப்பீடு தேவையா அல்லது மறுகூட்டல் தேவையா என்பதை முடிவு செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.மறுகூட்டல், மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் ஒப்புகை சீட்டை பாதுகாக்க வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.








