கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகளில் நாளை முதல், வகுப்புகள் துவங்க உள்ளன.

புதிய கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்களும், சீருடைகளும் நாளை வழங்கப்பட
உள்ளன.தமிழக
பாடத்திட்டத்தில், பள்ளி இறுதி தேர்வும், பொது தேர்வுகளும், ஏப்., 20ல்
முடிந்தன. ஏப்., 21 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இன்று வரை, 41
நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.
சென்ற ஆண்டில், முந்தைய வகுப்புகளில் இருந்த மாணவர்கள், நாளை அடுத்த
வகுப்புக்கு, தேர்ச்சி பட்டியலின்படி மாற்றப்பட உள்ளனர்.முதல் நாளான நாளை,
அரசின், 14 வகை நலத்திட்டங்களில், பாட புத்தகம், நோட்டு புத்தகம், இலவச
சீருடை போன்றவை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு இலவசமாக
வழங்கப்பட உள்ளன.பள்ளி திறப்பை பொறுத்தவரை, நாளை மறுநாள் சனிக்கிழமை என்பதால், பல தனியார்
பள்ளிகள், தங்கள் பள்ளி திறப்பை, ஜூன், 4க்கு தள்ளி வைத்துள்ளன. இந்த
பள்ளிகள், முதலாவதாக வரும் சனிக்கிழமையில், கூடுதலாக ஒரு நாள் பணியாற்றி
ஈடு செய்ய முடிவு செய்துள்ளன