மாற்றுத்திறன் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் ரூ.14ஆயிரமாக உயர்வு: சட்டப்பேரவையில் எடப்பாடி அறிவிப்பு
மாற்றுத்திறன் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் ரூ.14ஆயிரமாக உயர்வு: சட்டப்பேரவையில் எடப்பாடி அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விதி எண் 110ன் கிழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.அப்போது,
மாற்றுத்திறன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தற்போது
வழங்கப்பட்டு வரும் ஊதியம் ரூ.10 ஆயிரத்தை 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி
வழங்கப்படும் என்றார்.
அதில் சிப்காட்
நிறுவனத்தால் திருச்சி மாவட்டம் கண்ணுடையான் பட்டி, கே.பெரியபட்டி,
சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆயிரத்து 77 ஏக்கர் பரப்பளவில்
அமைக்கப்பட்டு வரும் தொழில் பூங்கா, 96 கோடி ரூபாய் செலவில்
மேம்படுத்தப்படும். காஞ்சிபுரம்
மாவட்டம் ஆலத்தூர்கிராமத்தில், 70 புள்ளி மூன்று மூன்று ஏக்கர்
நிலப்பரப்பில், 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிட்கோ தொழிற்பேட்டையின்
இரண்டாவது பகுதி நிறுவப்படும்.