💫கம்பாலா : உகாண்டா நாட்டில் ட்விட்டர்,
பேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர் போன்றவற்றை பயன்படுத்தும் நபர்களுக்கு வரி
விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜூன் 1ம் தேதி முதல்
அமல்படுத்தப்பட்டுள்ளது.
💫அதன் படி இந்த சமூகவலைதளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்துபவர்கள் நாள் ஒன்றிற்கு 200 சில்லிங் (ரூ. 3.54) வரிகட்ட வேண்டும்.
💫சமூக
வலைதளங்கள் மூலம் பொய்யான தகவல், வதந்திகள் பரப்புவதைத் தடுக்கும் வகையில்
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது