
புதுடெல்லி:
இந்தியாவில்
அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் தற்சமயம் ரூ.8,999 விலையில் விற்பனை
செய்யப்படுகிறது, முன்னதாக இதன் விலை ரூ.9,999 என்ற வகையில் தற்சமயம்
ரூ.1000 குறைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று அமேசான் எக்கோ டாட் ஸ்மார்ட்
ஸ்பீக்கர் விலை 8% குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.4,099 விலையில் விற்பனை
செய்யப்படுகிறது.
அமேசான் எக்கோ ஸ்பாட் மற்றும்
எக்கோ பிளஸ் ஸ்பீக்கர்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. இவை முறையே
ரூ.12,999 மற்றும் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டு
எக்கோ ஸ்பீக்கர்களை ஒன்றாக வாங்குவோருக்கு ரூ.1,000 கூடுதல் தள்ளுபடி
வழங்கப்படுகிறது. எனினும் அமேசான் எக்கோ பிளாக் மற்றும் கிரெ நிறங்களை
தேர்வு செய்வோருக்கு மட்டுமே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைன்
ஸ்டோர்களில் இரண்டு சாதனங்களின் விலை குறைப்பு குறித்து எவ்வித தகவலும்
இல்லை.

முன்னதாக
இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அமேசான் நிறுவனம் எக்கோ டாட், எக்கோ
மற்றும் எக்கோ பிளஸ் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்து, இவை இந்தியா
முழுக்க முன்னணி ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் விற்பநை செய்யப்படும் என
அறிவித்தது. புதிய ஸ்பீக்கர்களில் வாய்ஸ் கன்ட்ரோல் வசதி
வழங்கப்பட்டிருக்கிறது.
அமேசான் எக்கோ
ஸ்பீக்கர்கள் அலெக்சா டிஜிட்டல் அசிஸ்டண்ட் மூலம் இயங்குகிறது. இவை
வெப்பநிலையை அறிந்து கொண்டு தெரிவிப்பது, ரிமைன்டர் வசதியை செட் செய்தால்
சரியான நேரத்தில் நினைவூட்டும். இத்துடன் ஸ்போர்ட்ஸ் ஸ்கோர், ஷாப்பிங்
லிஸ்ட் மற்றும் பல்வேறு தகவல்களை வழங்கும்.
பாட்டு
கேட்க நினைத்தால், அமேசான் பிரைம் மியூசிக், சாவன் மற்றும் இதர சேவைகளில்
இருந்து உங்களுக்கு விருப்பமான பாடல்களை இயக்கும். ஸ்மார்ட் பல்பு மற்றும்
ஸ்விட்ச் போன்றவற்றுடன் இணைத்து விட்டால் அவற்றையும் டிஜிட்டல் அசிஸ்டன்ட்
இயக்கும்.