அதிகம் வேலை செய்தால் சர்க்கரை நோய் வருமா?

குறிப்பாக வாரத்திற்கு 45 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்யும்
பெண்களுக்கு சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் 70 சதவிகிதம் உள்ளது
என்கிறது இந்த நோய் தடுப்பு மையத்தின் ஆய்வு. இதே கால அளவில் வேலை செய்யும்
ஆண்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறுகிறது இந்த ஆய்வு.
பெண்கள் 30 அல்லது 40 மணி நேரம் வேலை செய்தாலும் பிரச்சினைகள்
ஏற்படுவதில்லையாம்.
பெண்கள் நீண்ட நேரம் வேலை செய்யும் போது ஏற்படும் கடுமையான மன அழுத்தம்
அவர்களுடைய உடலையும் சேர்த்து பாதிக்கிறது. இதனால், ஹார்மோன்களின் சமநிலை
பாதிப்படைந்து இன்சுலின் சுரப்பு குறைந்து சர்க்கரை வியாதிக்கு
வித்திடுகிறது.
இந்த ஆய்வறிக்கை BMJ Open Diabetes Research and Care என்ற பத்திரிகையில்
வெளியாகியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இந்த இந்த ஆய்வினை மேற்கொள்ள
35லிருந்து 74 வயதுள்ள 7065 பணியாளர்களை தேர்ந்தெடுத்து 12 வருட காலம்
ஆய்வுக்கு உட்படுத்தினர். இவர்களை நான்கு பிரிவினுள் அடக்கினார்கள். அதில்,
15-34 மணி நேரம் வேலை செய்தவர்கள், 35-40 மணி நேரம் வேலை செய்தவர்கள்
41-44 மணி நேரம் பணிபுரிந்தவர்கள் மற்றும் 45 மணி நேரம் வேலை செய்தவர்கள்
என்று பிரித்தெடுத்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் அதிக
நேரம் வேலை செய்த பெண்களில் 63 சதவிகித்த்தினருக்கு சர்க்கரை நோய் ஏற்படும்
அபயாம் அதிகமிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது, ஆண்களில்
வயதானோருக்கும், உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கும் தான் ஏற்படுமாம்.
மேலும், 2030ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 439 மில்லியன் நபர்களுக்கு
சர்க்கரை வியாதி வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, 2010ஆம்
ஆண்டில் சர்க்கரை நோய் வந்தவர்களின் எண்ணிக்கையை விட 50 சதவிகிதம் அதிகம்
என்பது குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டில் உலகளவில் சர்க்கரை வியாதிக்கென
செலவிடப்பட்ட தொகை 1.31 லட்சம் கோடி டாலர்கள் ஆகும்.