தலைப்பு: முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே
ஆசிரியர்: நா.முத்து நிலவன்
**இன்றைய தமிழகக் கல்வி எதிர் கொள்ளும் பல பிரச்சனைகள் குறித்தும் அச்சமின்றி தன் சிந்தனையில் விளைந்த கருத்துக்களை 18 கட்டுரைகளாக எழுதியுள்ளார் நா.முத்து நிலவன் அவர்கள்.
**வாழ்க்கையைக் கொடுக்கும் பாடங்களை மருந்துபோலத் தருகிறோம்...!
கல்வி சுமையாகிறது....!
வாழ்க்கையைக் கெடுக்கும் படங்களை
விருந்துபோலத் தருகிறோம்...!
வாழ்க்கையே சுமையாகிறது.
**தாய்மொழியையும் அதிலுள்ள இலக்கியங்களையும் மதிக்காமல்
வேற்று மொழிக்குத் தங்களை
அடிமையாக்கிக் கொண்டவர்கள்
தமிழ்நாட்டில் இருக்குமளவு
வேறுநாட்டில் இல்லை.
**MBBS படித்தால் மருத்துவர் ஆகலாம்
BE படித்தால் பொறியாளர் ஆகலாம்
BL படித்தால் வழக்குரைஞர் ஆகலாம்
IAS படித்தால் மாவட்ட ஆட்சியர் ஆகலாம்
எதுவுமே படிக்காமல் மந்திரி ஆகலாம்
ஆனால் என்ன படித்தால் மனிதர் ஆகலாம்?
மனிதரைப் படித்தால் நாமும் மனிதராகலாம்.
என்பது எனது நம்பிக்கை.
**குழந்தைகளை மருத்துவராகவும்,பொறியாளராகவும்,
வழக்குரைஞராகவும் வரவேண்டும் எனும் கனவில் அவர்கள் மனிதனாகவும் இருக்கவேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள் பல பெற்றோர்கள்.
** கல்வி முறையில் கை வைக்காமல் சமூகமாற்றம் சாத்தியமேயில்லை.
** மதிப்பெண் எடுக்கும் பயிற்சியை மட்டுமே தருவதுதான் பள்ளிக்கூடத்தின் நோக்கமா ?
மதிப்பெண் ஒரு பகுதிதான்.
** முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே
புத்தகத்தின் தலைப்பே புத்தகத்தை நோக்கி நம் கண்களை ஈர்க்கிறது.
** மனப்பாட கல்வியை விட மனிதநேயக்கல்வியே இன்றைய உலகுக்கு தேவை.
அன்புடன்
சீனி. சந்திரசேகரன்








