யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில், தேர்தலின்போது ஒப்புகைச்
சீட்டு வழங்கும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழகத் தலைமை
தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ நேற்று (ஆகஸ்ட் 3) தெரிவித்தார்.

வாக்கு இயந்திரங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொள்வது
எப்படி என்பது குறித்து, சென்னை கிண்டியில் 32 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்
உதவி தேர்தல் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில்
கலந்துகொள்வதற்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசினார் தமிழகத் தலைமை
தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ. அப்போது, வரும் 2019ஆம் ஆண்டு
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது அனைத்து வாக்குச் சாவடிகளிலும்
யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய ஒப்புகை சீட்டு வழங்கும் முறை
நடமுறைப்படுத்தப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர், தலைமைத்
தேர்தல் ஆணையம் தேதி அறிவித்த பிறகு காலியாக உள்ள திருப்பரங்குன்றம்
தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்' என்று தெரிவித்தார் சாஹு.
இதனைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு எந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.