காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கை கொண்டாட வேண்டும் என்பதில்லை..ஆடிப் பெருக்கு பூஜையை நம் பள்ளியில் எளிய முறையில் கொண்டாடலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஆடிப்பெருக்கு விழா மாணவர்களால் வெகுவிமர்சையாக உருவம்பட்டி அரசுப்பள்ளியில் கொண்டாடப்பட்டது..
முன்னதாக மாணவர்கள் அனைவரும் தேங்காய்,பழம்,பூ,கற்பூரம்,வெல்லம் ஆகியவற்றோடு ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போட்டு எடுத்துக் கொண்டு வந்தனர்.. அந்த செம்பை நிறைகுடத்தில் உள்ள நீர் எடுத்து மஞ்சளை கரைத்து கொண்டனர். .பின்னர் தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட்டனர்...அதன் பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி கங்கை,யமுனை,காவிரி,வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து முன்னொரு காலத்தில் எங்களது முதாதையர்கள் உங்களை புனிதமாக கருதி வழிபட்டது போல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையை தாருங்கள் என்று வேண்டிக் கொண்டனர். பின்னர் காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரையும் மனதில் நினைத்து மனதார வணங்கினர்..பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள மஞ்சள் நீரை பள்ளியில் உள்ள மரக்கன்றுகளுக்கு ஊற்றிவிட்டனர்.பூஜையில் வைத்த மஞ்சள் நூலினை மாணவிகள் கழுத்திலும்,ஆண்கள். வலது கை மணிகட்டிலும் அணிந்து கொண்டனர்..நாம் செய்கின்ற நற்செயல்களால் புண்ணியம் எப்படி பெருகுகிறதோ அது போல் ஆடிப் பெருக்கன்று துவங்கும் சேமிப்பும் பல மடங்கு பெருகும் என நினைத்து மாணவர்கள் சிறுசேமிப்பு உறுதி மொழி எடுத்து கொண்டனர்..
இது குறித்து இரண்டாம் வகுப்பு மாணவி வெள்ளையம்மாள் கூறியதாவது: சார் எங்க பாட்டி அரிசி,வெல்லம்,பாக்கு,வெற்றிலை,,பத்தி,கற்பூரம் எல்லாம் கொடுத்து இதை போய் சார்கிட்ட கொடுத்து பொங்கல் வைத்து ஆடிப்பெருக்கை கொண்டாடுங்கள் என கூறி அனுப்புனாங்க...நானும் சார்கிட்ட கொடுத்து பொங்கல்வைக்க சொல்கிறேன் என வாங்கி வந்தேன்..ஆனால் என் வகுப்பில் என்னைத்தவிர யாரும் கொண்டு வராததால் மனம் வருத்தமாக இருந்தேன்..பின்னர் எனது வகுப்பாசிரியர் வந்தவுடன் நான் எனது ஆசையை கூறினேன்..உடனே அவரும் எனது ஆசையை நிறைவேற்ற ஆசைப்பட்டு ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் இது போல யார் வீட்டில் எல்லாம் ஆடிப்பெருக்கு பள்ளியில் கொண்டாடுகிறார்கள் என கேட்டு பச்சரிசி,வெல்லம் கொடுத்துவிட்டார்கள் என கேட்டவுடன் ஐந்தாம் வகுப்பு அண்ணன்கள் அருண்குமார்,பூபதி,வினித் ,ராஜா ஆகிய அனைவரும் எங்களது வீட்ல எங்க அம்மா கொடுத்து விட்டாங்க சார்,எங்க பாட்டி கொடுத்துவிட்டார்கள் எனச் சொல்லி என்னைப் போல் அவர்களும தாங்கள் கொண்டு வந்த பச்சரிசி,வெல்லம்,கற்பூரம், வாழைப்பழம் ஆகியவற்றை எங்கள் வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்தார்கள் ..எங்களது ஆசிரியரும் உடனே சமையல் செய்யும் பாப்பு பாட்டியிடம் கொடுத்து பச்சரிசையை ஊற வைத்து அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி அதில் வெல்லம் ,மற்றும் தேங்காய் துருவல் ,ஏலக்காய் போட்டு வந்து தயார் செய்து கொடுத்தாங்க..அதை எங்களது ஆசிரியர் சாமி படத்தின் முன் வைத்து படைத்து வழிபட்டார். பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்..அதை சாப்பிடும் பொழுது எங்கள் மனம் மகிழ்வாக இருந்தது..மேலும் ஆடிப்பெருக்கையொட்டி சிறுசேமிப்பு பழக்க உறுதிமொழி எடுத்ததையும் ஆடிப்பெருக்கை பள்ளியில் நண்பர்களோடு கொண்டாடியதையும் மறக்க முடியாது என்றார்
வெள்ளையம்மாள் பூரிப்போடு..
சமையலர் பாப்பு கூறியதாவது: பள்ளிகளில் மாணவர்களுக்கு திருவிழாக்கள் பற்றி கூறுவதன் மூலம் திருவிழாக்களின் நோக்கம் அவற்றின் பயன்கள் கொண்டாடும் முறை பற்றி தெரிந்து கொள்கின்றனர்..எதிர்காலத்தில் பாரம்பரியம் மாறாமல் பண்டிகைகளை கொண்டாட முடிகிறது..இது போன்ற மகிழ்ச்சியான நாளில் குழந்தைகளோடு சிறுசேமிப்பு உறுதிமொழி எடுத்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது என்றார்.















