பார்போற்றும் சுரங்கமே!
இலக்கியங்களை படைத்து,
கலைத்துறையில் உயர்ந்து,
அரசியல் பயணத்தில் கோலாச்சி,
அண்ணாவின் ராஜபாட்டையில் பயணித்து,
தோல்விகளை தோற்கடித்து,
போர்குணத்தின் போர்முரசே!!!!!!
ஒய்வுக்கு ஓலையிட்டாயோ?
நாளை வருவேன் என்று கூறி,
அந்திவேளையில் ஓய்ந்துபோன ஆதவனே!!!
விடைபெறவா காவேரியில் கட்டிலிட்டாய்?
காவிரி கரைபுரள்கிறது, கண்ணீர் சுமந்து!!!
யாவரையும் அரவனைத்து,
ஒப்பில்லா அரசியலை பிசகாது வடித்து,
சிறை பல கண்டு,
சுயமரியாதை பாதை வகுத்து,
பகுத்தறிவு பகவலனாய் வலம் வந்து,
பார் போற்றும் உன்னத புனிதனே!!!!!
தங்களின் வழி தொடர்ந்து,
கோடான ,கோடி தொண்டர்களின் இதயங்களில் துடிக்கும் திராவிட தலைவனே!!
புரட்சிகலைஞரே!!!!
கண்ணீர்வடிக்கிறோம்...
காலத்தை கண்டிக்கிறோம்!!!!
உயிரினும் மேலான உடன்பிறப்புக்களை விட எங்கனம் முயன்றாய்???
தமிழில் உயிர்க்கும்,
தலைமுறைகளில் தொடரும்,
எங்கள் உறவோடு கலந்த உயிரே!!!!!
ஆழ்ந்த இரங்கல்கள்!!!!
இரா.சரவணன்








