*அ* ஞ்சுகத்து மைந்தனே..*ஆ* ர்ப்பரித்த சூரியனே..
*இ* யற்கையை எதிர்க்க..
*ஈ* டு இணை இங்கில்லை..
*உ* யிரின் மேலான உடன்பிறப்புகள்..
*ஊ* மையராய் ஆக்கிவிட்டு...
*எ* ழுச்சி நாயகனே..
*ஏ* ன் இந்த மௌனப்படுக்கை..
*ஐ* யா உன் சாதனையை..
*ஒ* ருவரும் செய்ய இயலா..
*ஓ* ங்கி ஒலிக்கும் உன் குரலே...
*ஔ* டதமாம் தமிழனுக்கு...
*இனி எங்கு கேட்பேன் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என்ற சிம்மக்குரலை*
நீங்கள் சென்றாலும் உங்கள் சாதனைகள் இன்னும் 1000 ஆண்டுகள் தமிழ் மண்ணில் பேசப்படும் ..ஆழ்ந்த இரங்களுடன் கல்விக்குரல் ..








