வாகன ஓட்டுனர்களுக்கு இன்றையே டிராபிக் இல் வண்டி ஓட்டுவதில் கூட பதற்றமில்லை. ஆனால் காவல் நண்பர்களிடம் சிக்கினால் சேதாரம் தான் என்ற மனநிலையே இங்கு நிலவுகிறது என்பது தான் உண்மை. வாகன ஓட்டுனர்களுக்கு தேவையான முக்கியமான சான்றிதழ்களில் ஒன்று டிரைவிங் லைசென்ஸ் தான். அதை எடுக்க ஏகப்பட்ட வேலை பார்க்க வேண்டும் என்று யோசித்தாலே நாம் சோர்த்து விடுகிறோம். உங்கள் டிரைவிங் லைசென்ஸ் ஐ ஆன்லைன் இல் வாங்கும் வசதியைப் புதிதாக அறிமுகம் செய்து எளிதாக்கி உள்ளது போக்குவரத்துக்கு கழகம்.
- உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்யுங்கள்.
- திரையின் இடது பக்கத்தில் "டிரைவிங் லைசென்ஸ்"(Driving Licence) என்ற ட்ராப் பாக்ஸ் இல் நிறையச் சேவைகள் இருக்கும்.
- "அப்ளை ஆன்லைன்"(Apply Online) ஆப்ஷன் தேர்வு செய்யுங்கள்.
- இப்பொழுது உங்களுக்கான ஆன்லைன் சேவைகளின் பட்டியல் தெரியும்.
- புது கற்றுணர் உரிமம் (New Learner Licence)
- புது ஓட்டுனர் உரிமம் (New Driving Licence)
- ஓட்டுனர் உரிமம் சேவைகள் / புதுப்பிக்க மற்றும் டூப்ளிகேட் வாங்க (Services On Driving Licence / Replacement, Duplicate, Other)
என இதர சேவைகள் பலவும் உங்கள் சேவைக்கு இருக்கும்.
- புது கற்றுணர் உரிமம் (New Learner Licence) கிளிக் செய்யவும்.
- உங்கள் விண்ணப்பத்திற்குத் தேவையான ஃபார்ம் இப்பொழுது வரும்.
- உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்து.
- உங்கள் சேவையையும் தேர்வு செய்யுங்கள்.
- இப்பொழுது உங்களுக்கான கற்றுணர் உரிமம் ஃபார்ம் தெரியும்.
- (Applicant does not hold Driving/ Learner Licence) இதற்கு முன் உங்களுக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் கற்றுணர் உரிமம் இல்லை என்ற ஆப்ஷன் தேர்வுt செய்யுங்கள்
- இறுதியாக சப்மிட் கிளிக் செய்யுங்கள்.
- ஆர்.டி.ஓ ஆபீஸ்
- பிண்கோடு
- ஆதார் எண்
- பெறுனர் முழுப் பெயர்
- பாதுகாவலர் பெயர்
- பிறந்த நாள்
- இரத்த வகை விவரம்
- மொபைல் எண்
- தாற்காலிக எண்
- ஈமெயில் ஐடி
- அடையாள குறிப்பு
- நிரந்தர விலாசம்
- தற்காலிகt விலாசம்
- கியர் வாகனத்திற்கு கற்றுணர் உரிமம்
- கியர் இல்லா வாகனத்திற்கான கற்றுணர் உரிமம் என்பதைக் கவனமாக தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- இறுதியாக சப்மிட் கிளிக் செய்து உங்கள் ஃபார்ம் சமர்ப்பியுங்கள்.
இப்பொழுது உங்களுக்கான ஒப்புகை சான்றிதழை பிரிண்ட் செய்யுங்கள்.
உங்களுக்கான ஃபார்ம் 1 ஐ பிரிண்ட் செய்துகொள்ளுங்கள்.
உங்களுக்கான ஃபார்ம் 1 எ பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்.








