
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழகொண்டூரில் தனலட்சுமி என்பவரின் வீடு இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்தபோது வீட்டினுள் இருந்த தனலட்சுமி மற்றும் அவரது மகன்களான ருத்ரன் (9 மாதம்) விஷ்ணுபிரியன் (4 வயது), கமலேஸ்வரன் (7 வயது) ஆகியோர் உடல் கருகி இறந்து கிடந்தனர். இதுபற்றி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனலட்சுமிக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்தது தெரியவந்தது. எனவே, குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மூவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.