பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.10.2018: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.10.2018:

அக்டோபர் 11


சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

திருக்குறள்

அதிகாரம்:நிலையாமை

திருக்குறள்: 333

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

விளக்கம்:

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

பழமொழி

Do as Romans do when in Rome

வேற்று நாட்டில் வேற்று நாட்டினர் போல் நட

இரண்டொழுக்க பண்பாடு

1. காலை கடன் கழிக்காமல் மற்றும் தன் சுத்தம் பேணாமல் பள்ளி வர மாட்டேன்.

2. என் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க முயற்சிப்பேன்.

 பொன்மொழி

நீண்ட நேரம் சிந்தித்த பின் உங்கள் நாவை அசையுங்கள். நீங்கள்  அவமானம் அடைய மாட்டீர்கள்.

     - டால்ஸ்டாய்

பொது அறிவு

1. ஜப்பானின் தலைநகரம் எது?

 டோக்கியோ

2. உலகின் மிகப் பெரிய  பாலைவனமான  சஹாரா பாலைவனம் எந்த கண்டத்தில் உள்ளது?

 ஆப்பிரிக்கா

தினம் ஒரு பழத்தின் மகத்துவம்

எலுமிச்சை

1. இந்த பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளது.  வைட்டமின் சி நிறைந்த உணவு.

2. இது உடல் எடையை குறைக்க உதவும்.

3. விளையாடும் குழந்தைகளுக்கு ஏற்ற பானம் ஆகும்.

4. இதை தலையில் தேய்க்க பொடுகு தொல்லை மறையும்.

English words and meaning

Gallon முகத்தளலவைகளில் ஒன்று
Generation தலைமுறை
Gradual படிப்படியான
Gravity புவி ஈர்ப்பு
Guess ஊகம்

அறிவியல் விந்தைகள்

இரத்த சிவப்பு அணுக்கள்

* இரத்தம் சிவப்பு நிறத்தில் காணப்பட காரணம் அதில் உள்ள ஹீமோகுளோபின் என்ற நிறமி ஆகும்.
* இதில் உள்ள இரும்பு ஆக்ஸிஜனோடு சேர்ந்து இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது.
* தானம் கொடுக்கப் பட்ட இரத்த சிவப்பு அணுக்களை 42 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்
* இரத்த சிவப்பு அணுக்கள் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்வதால் 'ஆக்ஸிஜன் படகு,' என அழைக்கப்படுகிறது.

நீதிக்கதை

கரும்பு விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது.

அவர்கள் அடிக்கடி, ""அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்?'' என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான்.

ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, ""நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா?'' என்றார்.

உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, ""சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர்,'' என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார்.

அமைச்சரோ ""அரசே! அவர் உங்களை அவமானப் படுத்துகிறார். அவர், "எங்கள் அரசர் பலவீனமானவர்; எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார்,'' என்றார். இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார்.

அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, ""கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார்,'' என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான்.

""அரசே! என்னைக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்?'' என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார்.

தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, ""நான் உன்னிடம் பிரியம் வைத்திருப் பதற்குக் காரணமே இதுதான்,'' என்று புகழ்ந்தார்.

கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது.
இன்றைய செய்திகள்

11.10.18

* இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான துஷார் மேத்தா புதிய சொலிசிட்டர் ஜெனரலாக புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

* கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் இன்று முதல் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* உதகை மலை ரயிலுக்கான புதிய ரயில் கட்டணங்கள் கடந்த திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன.

* அர்ஜென்டீனாவில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் 15 வயது வீரரான லால்ரின்னுங்கா ஜெரேமி.

* சுல்தான் ஜோஹோர் கோப்பை ஜூனியர் ஹாக்கியில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5-4 என வீழ்த்தியது.

Today's Headlines

🌻India's senior lawyer and additional solicitor general Tushar Mehta was appointed as new solicitor general on Wednesday.

🌻 The name of the Koyambedu Bus Station has been renamed as Dr. MGR Railway Station today.

🌻 New Rail fares for Ooty Mountain Rail has been in effect since last Monday.

🌻15-year-old Larrynunga Jeremy won the first gold medal for India in the youth  Olympic Games in Argentina.

🌻 Indian team defeated Australia 5-4 in Wednesday's match at Sultan Johor Cup Junior Hockey.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H