இதுவரை 1440 பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 5ம் கட்டமாக இன்று 308 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விழா இன்று வேலூரில் நடக்கிறது.
பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அங்கீகார உத்தரவுகளை வழங்குகிறார்.
இதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 64, வேலூர் 109, கிருஷ்ணகிரி 81, தர்மபுரி 54 என 308 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.








