விழுப்புரம் அக்டோபர் 15;
விழுப்புரம் அடுத்த நன்னாடு அரசு உயர்நிலைப் பள்ளியில்
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் (பொ) திருமதி
க. சுபாஷிணி தலைமை தாங்கினார்.
ஆசிரியர் திரு க. இராம்குமார் மற்றும் அப்துல் கலாம் நற்பணி மன்ற உறுப்பினர்
திரு. தீனதயாளன், திரு. சிரஞ்சீவி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் திருமதி சிதம்பரம் மா.
பொற்செல்வி மற்றும் நன்னாடு ஊர் பெரியவர் திரு. சி. அருட்பெருஞ்சோதி, அப்துல்
கலாம் நற்பணி மன்ற உறுப்பினர் திரு. வித்யாபதி ஆகியோர் விழா சிறப்புரையாற்றினார்கள்.
மேலும், விழாவில்
காணை வி. ஈ.
டி. கல்வியியல்
கல்லூரி பயிற்சி ஆசிரியர் செல்வி ர. பூங்குழலி மற்றும் கப்பியாம்புலியூர் சிகா கல்வியியல் கல்லூரி பயிற்சி
ஆசிரியர் செல்வி. சீ. பிரியங்கா
ஆகியோர் உரையாற்றினார்கள்.
விழாவில் இளநிலை உதவியாளர் திரு. ர. புருஷோத்தாமன், ஆய்வக
உதவியாளர் திரு மு. பாலாஜி, காணை வி.
ஈ. டி. கல்வியியல்
கல்லூரி மற்றும் கப்பியாம்புலியூர் சிகா கல்வியியல் கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள், பெற்றோர்கள்
உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,
மாணவியர்கட்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
முன்னதாக, பள்ளி
வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. குத்துவிளக்கு ஏற்றிய பின்பு அறிவியல் கண்காட்சியினை பயிற்சி ஆசிரியர் செல்வி ரா. விஷ்ணுபிரியா முன்னின்று வழி நட்த்தினார்.
விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியர் திரு தி. பரிமேலழகன்
வரவேற்றார். முடிவில்
ஆசிரியர் திருமதி பா. பூங்கோதை நன்றி
தலைமையாசிரியர் (பொ)சுபாஷிணி
கூறினார்.