
கற்பூரம் சினமொன் கம்போரா என்ற மரத்திலிருந்து கிடைக்கிறது. இது பல
வழிகளில் உபயோகமாக இருக்கிறது. குறிப்பாக வலி நிவாரணி மற்றும் சளி
மருந்துகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கற்பூர மரத்தின் எண்ணெயில்
இருந்து கிடைக்கும் எண்ணெயும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. இந்த
பதிவில் கற்பூரத்தின் அற்புத பலன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலி மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்தும்
வலி மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்தும்
சருமத்தின் மீது இது எதிர் எரிச்சலூட்டும் தன்மை கொண்டது.
அதனால் இது வலி
மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இது சருமத்தின் மீது நரம்புகளை
தூண்டி உணர்வின்மையை ஏற்படுத்துகிறது, இதனால் வலி மற்றும் வீக்கம்
குறைகிறது. மேலும் சருமம் சிவப்பாவதையும் தடுக்கிறது.
சரும ஆரோக்கியம்
சரும ஆரோக்கியம்
பெரும்பாலனவர்கள் சந்திக்கும் ஒரு சரும பிரச்சினை அரிப்பு மற்றும் சருமம்
சிவந்து போவதாகும். கற்பூரம் சருமத்தின் மீது உள்ள துளைகள் அடைப்பதுடன்
அரிப்பு மற்றும் சிவப்பு சருமத்தை தடுக்கும். இதனை பயன்படுத்துவதும்
மிகவும் எளிது, நீரில் சிறிது கற்பூர எண்ணெயை கலந்து அதனை பாதிக்கப்பட்ட
இடத்தின் மீது தடவுங்கள்.
பூஞ்சை தொற்றுகள்
பூஞ்சை தொற்றுகள்
நகங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகள் அல்லது ஓனிக்கோமைகோசிஸ் போன்ற
நோய்களுக்கு பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படும். ஆனால் வேப்போரப்
தயாரிக்கும்போது கற்பூர எண்ணெய் அதில் கலக்கும்போது அது பூஞ்சைகளை விரைவாக
குணமாக்க உதவும். ட்ரைக்கோபைட்டானால் ஏற்படும் ஓனிக்கோமைகோசிஸை குணப்படுத்த
உதவுகிறது.
எக்ஸிமா சிகிச்சை
எக்ஸிமா சிகிச்சை
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சருமத்தில் ஏற்படும் எரிச்சலை
குணப்படுத்த கற்பூரம் பயன்படுகிறது. வலி மற்றும் வீக்கம் இரண்டும் எக்ஸிமா
நோயின் அறிகுறிகளாகும். கற்பூரம் பல லோஷன்களிலும், களிம்புகளிலும் எக்ஸிமா
நோயை குணப்படுத்த உதவுகிறது.கொஞ்சம் பத்திரமா பாருங்க, மெய்யாலுமே தல கிறுகிறுன்னு
சுத்திடும்!
தூக்கம்
தூக்கம்
கற்பூர எண்ணெயின் வாசனை மனதில் ஒரு மகிழ்ச்சியான எண்ணத்தை
உண்டாக்கக்கூடும், அதன்மூலம் நிம்மதியான தூக்கத்தை வழங்கும். உங்கள்
தலையணையில் சில துளிகள் கற்பூர எண்ணெய் தெளிப்பது உங்களுக்கு நிம்மதியான
தூக்கத்தை வழங்கும்.
சளி மற்றும் இருமலை குணப்படுத்தும்
கோவை அவிநாசி ரோட்டில் 2BHK அபார்ட்மெண்ட்ஸ் 27,00,000 முதல்
முடி உதிர்வா? எளிமையாக மீண்டும் பெறுவது எப்படி?
கார்காப்புறுதி,75%சேமி.குறைந்த பிரீமியஉத்தரவாதம்.உடனே வாங்கு!
சளி மற்றும் இருமலை குணப்படுத்தும்
கற்பூரம் சளி மற்றும் இருமல் சிகிச்சைக்கு உதவுவதோடு தொண்டையில் ஏற்படும்
கோளாறுகளை சரிசெய்யவும் உதவுகிறது. மூக்கடைப்பை சரிசெய்ய உதவும் பல
வேப்போரப்களில் கற்பூர எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தூங்கும்போது
மார்பில் இதனை தடவி அது செய்யும் அற்புதத்தை பாருங்கள்.
முடி வளர்ச்சி
முடி வளர்ச்சி
உச்சந்தலையில் குறைவான முடி இருப்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய
பிரச்சினையாகும். இதற்கு முடியை சரியாக பராமரிக்காதது, அதிக ரசாயன
பொருட்களின் உபயோகம் என பல காரணங்கள் உள்ளது. இந்த பிரச்சினைக்கான சரியான
தீர்வு கற்பூர எண்ணெயாகும். கற்பூர எண்ணெயை தலையில் தடவுவது உங்கள் முடியை
மென்மையாக மாற்றுவதோடு முடிவளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. நீங்கள்
வழக்கமாக உபயோகிக்கும் எண்ணெயுடன் சிறிது கற்பூர எண்ணெயையும் சேர்த்து
தலையில் தடவுங்கள். இது தலைப்பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து
முடிவளச்சியை அதிகரிக்கும்.
பேன்களை அகற்றும்
பேன்களை அகற்றும்
குளிக்கும் நீரில் கற்பூர எண்ணெயை கலந்து குளிப்பது தலைவலி மற்றும் பேன்
தொல்லையிலிருந்து உங்களை பாதுகாக்கும். கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில்
கலந்து தூங்கும் முன் தலையில் தேய்த்துக்கொள்ளவும். காலையில் ஷாம்பூ கொண்டு
தலையை அலசவும். இதன்மூலம் பேன்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கும்.