இன்று பிப்ரவரி 4, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.
மக்களுக்கு புற்று நோய் குறித்த விழிப்பு உணர்வு இல்லாததே, இதற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
*புற்றுநோயை தடுக்கும் வீட்டிலே எளிய முறைகள்:-*
புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது கறிவேப்பிலை.
இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
✍ *( மு.இராஜேஷ்*)
மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட ப்ராக்கோலி சாப்பிட்டால். இது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.
பப்பாளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால் அதனை உட்கொண்டால் புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம்.
புற்றுநோய்: எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது? #WorldCancerDay
உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்கு காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.
புற்றுநோய் உண்டாவதற்கான கீழ்க்காணும் ஐந்து முக்கிய காரணிகளை அந்த அமைப்பு பட்டியலிடுகிறது.
புகையிலைப் பொருட்களை உட்கொள்வது
மது அருந்தும் பழக்கம்
அதிக உடல் எடையுடன் இருப்பது
குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது
உடல் உழைப்பு இல்லாமை
மேற்கண்டவற்றில் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22% பேரின் பாதிப்புக்கு காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைப் பிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்புண்டு.
புற்றுநோய், மாரடைப்பைத் தடுக்க இதோ ஓர் எளிய வழி!
'உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்'- ஆய்வாளர்கள்
உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்கு காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்களே என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
புற்றுநோய் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் புற்றுநோய் உண்டாகிறது.
நீண்டகாலம் ஆன்டி-பயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் உண்டாக வாய்ப்புண்டு என்கிறது ஓர் ஆய்வு
எவ்வாறு புற்றுநோயைத் தவிர்ப்பது?
மேற்கண்ட புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை தவிர்ப்பதுடன், கதிர்வீச்சுகள், கற்று மாசுபாடு, பாலுறவின்மூலம் பரவும் எச்.பி.வி எனப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (Human papilloma virus) தொற்று, உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.
எச்.பி.வி மற்றும் ஈரல் அழற்சி நோயை உண்டாகும் ஹெப்படிட்டீஸ்-பி வைரஸ் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன்மூலம் புற்றுநோய் உண்டாவதை தடுக்க முடியும். இந்த தடுப்பூசிகளை போடுவதன்மூலம் மட்டுமே ஆண்டுக்கு 10 லட்சம் உயிர்களை காப்பாற்ற முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்








