அழுகை என்பது உணர்வின் வெளிப்பாடு. வலி, துக்கம், இழிவு, இயலாமை போன்ற
நிகழ்வுகளின்போது நம் உணர்வு அழுகையாக வெளிப்படுகிறது. தாங்க முடியாத வலி,
பிரியத்துக்குரியவரின் மரணம், மற்றவர்கள் தரக்குறைவாகப் பேசும்போது /
நடத்தும்போது, நம்மால் ஒரு செயலைச் செய்ய முடியாதபோது செக்ரடோமோட்டார்
(Secretomotor) நுணுக்கமாகச் செயல்பட்டு, கண்ணீர்ச் சுரப்பியிலிருந்து
(Lacrimal Gland) கண்ணீரைச் சுரக்க வைக்கிறது.
சில நேரம் மகிழ்ச்சியிலும் கண்ணீர் சுரக்கும்; இதை ஆனந்தக் கண்ணீர் என்று சொல்லுவோம். வருத்தமான கண்ணீருக்கும் மகிழ்ச்சியான கண்ணீருக்கும் இடையே ரசாயனக் கலப்பில் மாற்றம் இருக்கிறது. ஆண்களை விட பெண்களும் குழந்தைகளும் அதிகமாக அழுகின்றனர். விலங்குகள் நம்மைப்போல் உணர்ச்சிவசப்பட்டு அழுவதில்லை. கண்களில் தூசி, வேண்டாத பொருள் உறுத்தும்போது கண்ணீர் விடுகின்றன.