காலிஃப்ளவரில் ஆண்ட்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும். இதன் மூலம் மன அழுத்தம், இதய நோய்களும் குணமாகும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன.
இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். ஒபிசிட்டி குணமடையும். இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிற்றுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் கேன்சரையும் கட்டுப்படுத்துகிறது. இந்த பூக்களில் சின்னஞ்சிறு புழுக்கள் காணப்படும்.
எனவே நீரை கொதிக்க வைத்து அதில் மஞ்சத்தூளை போட்டு கொதிக்க வைத்து பின்னர் சமையலில் உபயோகப்படுத்த வேண்டும். இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது. மூலத்தை கட்டுப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்கும்.









