வளையல் போராளிகளுக்கு...
திலகத்தாரகைகளே
நீர் நிலமென இயற்கையாவிலும் பெயரான பூவையர்களே
உயிர்க்கரு சுமக்கிற கருவிழிகளே
கவிஞனின் ஆதர்ச பாடுபொருள்களே
கண்ணசைவில் உலகை நெம்புகிற கற்பூரங்களே
கதவோரமும் ஒன்டியே கிடக்கிற மௌனப் பூக்களே
சமநீதி கேட்டு கேட்டு சலித்தே கிடக்கிற சரித்திரங்களே
உள்ளங்கைக்குள் உலகே சுருங்கினாலும்
உடைகளில் உண்டான சமத்துவம்
இன்னும் உள்ளங்களில் உருப்பெற வில்லையே
இணை உறவே
அடக்குமுறை கட
பார் அதிர நட
இச்சைப் பொருளாகாதே
இம்சைகளின் இருள் ஏற்காதே
சாராய நெடியோடும்
அடுப்பங்கறைப் புகையோடும் தேய்ந்திடாத முழுமதியாய் உலா வா
கண்ணீரில் கசிந்த காலங்கள் கடந்துபோக
காமத்துப்பாலாய் இன்னமும் எதிர்ப்பார்க்கும் ஈனர்களுக்கு பதிலளி உன் திமிர்ச்செருப்பால்..
நெற்றித்திலகமே
நீயின்றி ஏது இப்பூவுலகமே
உயர் உயர உயர இன்னும் உயர்
வளைக்கரங்களே உங்களுக்கென்
வணக்கங்கள்
பெண்மை வாழ்க
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்
பேரன்புடன்,
சீனி.தனஞ்செழியன்
முதுகலைத் தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்,
வேலூர் மாவட்டம்.