மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக் கான கலந்தாய்வில் அரசுசாரா டாக்டர்கள்
அதிக இடங்களை கைப்பற்றினர். நீட் மதிப்பெண் ணுடன், சலுகை மதிப்பெண்
கிடைத்தும் அரசு டாக்டர்கள் பின்தங்கினர்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு
ஒதுக்கீட்டுக்கான எம்டி, எம்எஸ் இடங்களுக்கான கலந் தாய்வு சென்னை அண்ணாசாலை
அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.
நேற்று முன் தினம் கலந்தாய்வு நிறைவடைந் தது.
மொத்தம் 4 நாட்கள் நடந்த கலந்தாய்வில் 996 இடங் கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதில் அரசு டாக்டர்கள் 421 இடங்களை யும் அரசுசாரா டாக்டர்கள் 575 இடங்
களையும் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு 2 சதவீத இடங்களை மட்டும் எடுத்திருந்த அரசுசாரா
டாக்டர்கள் கடந்த ஆண்டு சுமார் 40 சதவீத இடங்களை கைப்பற்றினர்.
அரசு டாக்டர்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண்ணுடன், சலுகை மதிப்பெண்
வழங்கப்படுகிறது. ஆனால், நீட் தேர்வு மதிப் பெண்ணை மட்டும் வைத்துக் கொண்டு
இந்த ஆண்டு 50 சத வீதத்துக்கும் அதிகமான இடங் களை அரசுசாரா டாக்டர்கள்
கைப் பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அகில இந்திய கலந்தாய்வு
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர்
கதிர்வேலுவிடம் கேட்ட போது,
“கடந்த இரண்டு ஆண்டுகளாக அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரண்டு கட்ட
கலந்தாய்வு நிறைவடைந்த பின்னரே, தமிழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வு
நடந்தது. அரசு சாரா டாக்டர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில்
சென்று விடுவார்கள்.
ஆனால், இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டு முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த
ததும், தமிழகத்தில் கலந்தாய்வு முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கி விட்டது.
அதனால், கலந்தாய்வில் அரசு டாக்டர்களைவிட, அரசுசாரா டாக்டர்கள் அதிக
இடங்களை பெற்றுள்ளனர்” என்றனர்.
நீதிமன்றத்தில் வழக்கு
இதுதொடர்பாக அரசுசாரா சேவை மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர்
கார்த்திகேயன் கூறும் போது, “அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதல்
கட்ட கலந் தாய்வு முடிந்து, தமிழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வு தொடங்க
வேண்டும். இதுதான் சரியா னது.
ஆனால், கடந்த ஆண்டுகளில் அதுபோல் நடைபெறவில்லை.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங் களுக்கு இரண்டு கட்ட கலந் தாய்வு முடிந்த
பிறகே, தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கும்.
அதனால், அரசுசாரா டாக்டர் களால் தமிழகத்தில் அதிக இடங்களை எடுக்க
முடியவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதனால், இந்த
ஆண்டு தமிழகத்தில் கலந்தாய்வு நியாயமாக நடந்தது. அரசுசாரா டாக்டர்களும்
அதிக இடங்களை பிடிக்க முடிந்தது” என்றார்.