தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீட்டில் ஓவிய ஆசிரியர் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமனம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆன்லைன் விண்ணப்பப் படிவத்திலும், சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பத்திலும் தமிழ் வழியில் படித்தவர்கள் என்று குறிப்பிட்டிருந்தவர்களுக்கு மட்டும், 20% இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டார். மேலும் அவ்வாறு குறிப்பிடாதவர்களுக்கு இந்த இடஒதுக்க்கீட்டில் பணி வழங்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.








