தவறா `மை' - தஞ்சை இளைஞர்களின் நூதன விழிப்புணர்வு பிரசாரம்
தஞ்சாவூர் மத்துவக்கல்லூரி மாணவர்கள், தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க
வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கை ஒன்று விரலை
உயர்த்தியபடி இருக்கும் வடிவில், இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதைச் சுற்றி
அவர்கள் நின்றுகொண்டு, தவாறமை என்ற வார்த்தை வருவதுபோல செய்துகாட்டியது
பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
தஞ்சாவூரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான
பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இன்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரியில், வாக்காளர்கள் வாக்களிப்பதற்குப்
பணம் வாங்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நாடகத்தை
மருத்துவக் கல்லுாரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் நடத்தி, அவர்களே நடிக்கவும்
செய்தனர். இதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லுாரி மாணவ மாணவிகளின் பைக்
விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களும் தயார்
நிலையில் இருந்தனர்.
ஆனால், பைக் ஒட்ட இருந்த மாணவ மாணவிகள் யாரும் ஹெல்மெட் அணியவில்லை.