♦♦ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:
♦♦புதிய பாடதிட்டம், மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து தேர்வுக்கும் விடை அளிக்கும் வகையில் உள்ளது. கடந்த ஆண்டு 210 நாட்கள் பள்ளி நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், காலநிலை மாற்றத்தால் 192 நாட்கள் மட்டுமே பள்ளி திறக்கப்பட்டது.
♦♦ஆசிரியர் தேர்வில் இருந்த வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டாலும் அவர்கள் மறுதேர்வு எழுத வேண்டும்.
♦♦ஸ்மார்ட் கார்டை மாணவர்கள் பஸ் பயணத்திற்கு பயன்படுத்துவது குறித்து, முதலமைச்சரிடம் கலந்தாேலாசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
♦♦பள்ளிக்கு நன்கொடை வழங்கும் தனி நபர்களுக்கு வரி விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
♦♦விரைவில் அனைத்து வகுப்புகளுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கொண்டு வரப்படும்.
♦♦ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.வரும் நாட்களில் இது குறித்த அறிவிப்புகள் வெளிவரும்.
♦♦விடைத்தாள் திருத்தும் பணியில் கவனக்குறைவாக இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
♦♦அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு என தனியாக வேலை வாய்ப்பு, உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வில் சலுகை வழங்க முடியாது.
♦♦அதேபோன்று தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க முடியாது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.