DayZero என்றால் என்ன? DayZero பட்டியலில் இந்தியா..!* *சென்னை தப்பிக்குமா?* - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Home Top Ad
Post Top Ad

Join Our Kalvikural Telegram Group - Click Here

Tuesday, 18 June 2019

DayZero என்றால் என்ன? DayZero பட்டியலில் இந்தியா..!* *சென்னை தப்பிக்குமா?*

*DayZero என்றால் என்ன?

DAYZERO இப்படியான ஒரு வார்த்தையை நீங்கள் அறிந்துள்ளீர்களா? நாம் அறிந்து கொள்ளக் கூடிய தருணம் வந்து விட்டது.

நம் வீட்டில் ஒரு நாள் தண்ணீர் இல்லையென்றால் நாம் படும் அவஸ்தையை சொல்ல வார்த்தை இல்லை. அதே 10 நாட்களுக்குத் தண்ணீர் இல்லையென்றால் நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஒருவேளை அனைத்து நீர் ஆதாரங்களும் வற்றிப் போய் விட்ட வாழ்வாதாரம் என்றால் அது தான் Dayzero. Dayzero என்பது தண்ணீர்ப் பஞ்சத்தின் உச்சக்கட்ட நிலை.

DayZero-வை சந்தித்த முதல் நாடு:

இதைச் சந்தித்த முதல் நாடு தென்ஆப்பிரிக்காவில் உள்ள (capetown) என்ற நகரம் தான். நாட்டின் கட்டமைப்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் குடிக்கத் தண்ணீர் இல்லையெனில் நாடு மிக மோசமான நிலையை சந்திக்கும். அதற்கு உதாரணம் தான் Capetown.

இன்றும் தண்ணீர் பஞ்சத்தால் கடல் நீரை குடிநீராக மாற்றி ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது அந்நாட்டின் விதிமுறைகளில் ஒன்று. நினைத்துப் பாருங்கள் நாம் ஒருவேளை குளிக்கும் தண்ணீரின் அளவு கூட 50 லிட்டருக்கும் அதிகம்.

DayZero பட்டியலில் இந்தியா..!

சரி நாம் ஏன் இப்போது இதைப் பேச வேண்டும் என்று கேட்கீறீர்களா ? Dayzero நம்மையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த அபாய நிலையை நாம் தொட்டு விட்டோம் என்பதே உண்மை. ஆம் ஐநா அறிவித்த Dayzero பட்டியலில் இந்தியாவும் ஒன்று.

பெங்களூர் தான் அடுத்த DayZero:

இந்தியாவில் உள்ள பெங்களூரு (Bangalore) தான் Dayzero சந்திக்கப் போகும் அடுத்த நகரம் என்று கூறியிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அங்கு வேகமாக வளர்ந்து வரும் தொழிற்சாலைகள். அந்த நகரத்தின் நீர்நிலைகள் முழுவதும் மாசுவால் நிறைந்துள்ள காரணத்தினால் நீர் நிலைகள் அனைத்தும் வற்றிப் போய் விட்டது.

இதனைத் தவிர்க்க அரசு பல வழிகளைச் செய்தாலும் இந்த நிலை இன்னும் நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் பெங்களூரு Dayzero சந்திப்பது உறுதி என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சென்னை தப்பிக்குமா?

இதில் Dayzero சென்னையையும் விட்டு வைக்கவில்லை. இப்பொழுது உள்ள நீர் ஆதாரங்களை வைத்து சமாளித்துக் கொண்டிடுக்கிறது சென்னை. சென்னை குடிநீர் வாரியம் சில கட்டுப்பாடுகளை சென்னை வாசிகளுக்கு விதித்துள்ளது.

தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், தண்ணீரைச் சேமிக்க வேண்டும் எனப் பல நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தப்பிப்பது எப்படி?

தண்ணீர் பற்றாக்குறை என்பது நம் நாட்டு மக்களுக்கு கோடை காலங்களில் மிகப் பெரிய சவாலாகத் தான் உள்ளது. மழைக் காலங்களில் தனிநபர் வீடுகளில் நீரை சேமிப்பதும், மரங்களை அதிக அளவில் வளர்ப்பதும், இந்நாட்டை தண்ணீர் பற்றாகுறையிலிருந்து காப்பாற்றக் கூடிய வழி என்று சொன்னால்  அது மிகையல்ல.

No comments:

Post a comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.