ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. ஜூன்
எட்டாம் தேதி முதல் தாள் ஜூன் 9ம் தேதி இரண்டாம் தாளுக்கான தேர்வு
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகள் காலை பத்து மணி முதல் ஒரு மணி வரை நடைபெறும். ஆசிரியர்
தகுதித்தேர்வு 2019 தேர்வு எழுதும் நபர்களுக்கு டிஆர்பி புதிய அறிவிப்பு
வெளியிட்டுள்ளது. தேர்வு எழுத வரும் நபர்கள் ஹால் டிக்கெட்டுடன்
புகைப்படத்துடன் கூடிய ஒரிஜினல் அடையாளச் சான்று ஒன்று கட்டாயம் கொண்டு
வரவேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.
அடையாளச் சான்றாக பான் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்ற ஏதாவது
ஒரு அரசு ஆவணத்தை எடுத்துவர அறிவுறுத்தியுள்ளது. இத்தேர்வுக்கான ஹால்
டிக்கெட் http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து
பதிவிறக்கம் செய்து கொள்ள டிஆர்பி அறிவுறுத்தியது.