width="320" />உணவு உண்ணும் முறையும் அதை சார்ந்த ஆரோக்கியமும்:
உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் இன்று
மருந்தே உணவு என மாறிக் கொண்டு வருகின்ற இந்த காலகட்டத்தில் நமது
முன்னோர்கள் பின்பற்றிய உணவு முறையை நாமும் பின்பற்ற முயற்சித்தோம் என்றால்
நாமும் ஆரோக்கியமாக வாழலாம் நமது முன்னோர்கள் பின்பற்றிய உணவு முறையை
பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவே இப்பதிவு
உணவை மருந்தாக்கி உண்டால் அதுவே ஆரோக்கியத்தின் வழிகாட்டி. இதையே
சித்தர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்றனர்.
உணவை முறையாக உண்பதன் மூலம் மூலமே நோயில்லா வாழ்வு வாழலாம் என்பதை
சித்தர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.
இன்று உணவு என்பது பகட்டுக்காக உண்பது போல் ஆகிவிட்டது. நாவின் சுவைக்கே
அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் சத்தான உணவு என்பது தற்போது சத்து
மாத்திரைகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றன.
இதனால் இன்று 40 வயதைத் தாண்டினாலே ஏதோ ஒரு நோயின் தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் உள்ளது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. ஆனால் அத்தகைய செல்வம் இன்று வாழும் மக்கள் அனைவருக்குமே எட்டாக்கனியாக உள்ளது.
இந்நிலை மாற நல்ல உணவு முறையில் சத்தான உணவுகளை உண்ணும் முறை பற்றி சித்தர்கள்கூறிய அறிவுரைகளைக் காண்போம்.
முதலில் உணவு உண்ணும் முறையில் தவிர்க்க வேண்டிய முறைகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
இரவில் தாமதமாக உணவு உண்பது,
கடினமான உணவுகளை உண்பது,
அவசர அவசரமாக உண்பது.
பொதுவாக இரவு உணவு என்பது அரை வயிறுக்குத்தான் இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடவேண்டும்.
இரைப்பைக்கு ஓய்வு அவசியம். இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் உணவு செரித்துவிட்டால் அது நல்ல நித்திரைக்கு வழிவகுக்கும்.
இரவு உணவு எளிதில் சீரணக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும். அதிக காரம், அதிக புளிப்பு மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
தயிர், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை இரவில் தவிர்க்கவேண்டும். கீரைகளை
மதிய உணவில் சேர்ப்பது நல்லது. ஆனால் இரவு உணவில் சேர்த்தால் செரியாமை
உண்டாகும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில் சுக்கு சேர்த்து
அருந்த வேண்டும். அல்லது 5 பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து கலந்து பாலில்
சாப்பிடுவது நல்லது.







